முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈராக்கில் எண்ணெய் ஆலையை கைப்பற்றிய தீவிரவாதிகள்

புதன்கிழமை, 18 ஜூன் 2014      உலகம்
Image Unavailable

 

பாக்தாத், ஜூன்.19 - இராக்கின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையான பாய்ஜி ஆலையின் ஒரு பகுதியை அரசுக்கு எதிரான தீவிரவாத படையினர் கைப்பற்றினர். 

தீவிரவாதிகள் மேலும் முன்னேறாத வகையில் பாதுகாப்புப் படையினர் கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். இராக் தலைநகர் பாக்தாத்தின் வடக்கே உள்ள சலாஹெய்டின் மாகாணத்தில் இருக்கிறது பாய்ஜி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை. இந்திய நேரப்படி நேற்று காலை 5.30 மணியளவில் இந்த ஆலையின் ஒரு பகுதியை தீவிரவாதிகள் கைப்பற்றினர். இத்தகவலை ஆலையின், மூத்த மேலாளரும் உறுதி செய்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் தீவிரவாதிகள் முன்னேறாத வகையில் பாதுகாப்புப் படையினர் தாக்குதலில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார். 

இராக்கின் இரண்டாவது பெரிய நகரான மொசுல் நகரை தீவிரவாதிகள் கைப்பற்றிய உடனேயே, பாய்ஜி ஆலையில் பணியாற்றிய பல ஊழியர்கள் வெளியேறிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கத.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்