முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலேசிய கடற்பதியில் படகு கவிழந்ததில் 66 பேர் மாயம்

புதன்கிழமை, 18 ஜூன் 2014      உலகம்
Image Unavailable

 

கோலாலம்பூர், ஜூன்.19 - மலேசிய தலைநகர் கோலாலம்பூர் கடற்பகுதியில், படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 66 பேரின் நிலைமை கேள்விக்குறியாக உள்ளது. 

கோலாலம்பூர் கடற்கரையின் மேற்கு பகுதியிலிருந்து 45 கி.மீ அருகே சென்றுகொண்டிருந்த பயணிகள் படகு ஒன்று விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது. இதுகுறித்து கடற்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், பயணிகளை மீட்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடலில் தத்தளித்த 31 பயணிகளை கடற்படை வீரர்கள் மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர். படகில் 97 பயணிகள் சென்றதாகவும், அவர்கள் அனைவரும் இந்தோனேஷிய தொழிலாளர்கள் என்றும், ரமலான் பண்டிகையையொட்டி அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி வந்துகொண்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது. கடற்பகுதியில் எஞ்சிய 66 பயணிகளை தேடும் பணி முடக்கிவிடப்பட்டுள்ளது. 

மலேசிய கடல் பகுதியில், காற்றின் அழுத்தம் அதிகமாக உள்ளது. இதனால் அலைகள் வலுவானதாக எழுவதால் விபத்துகள் இந்த வருடம் அதிக அளவில் ஏற்படுகிறது, என்று மலேசிய கடற்படை அதிகாரி ஒருவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்