முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்தில் இனி தீபாவளி - ரம்ஜானுக்கு விடுமுறை இல்லை

புதன்கிழமை, 18 ஜூன் 2014      உலகம்
Image Unavailable

 

லண்டன், ஜூன்.19 - தீபாவளி, ரம்ஜான் பண்டிகைகளுக்கு தேசிய விடுமுறை அளிக்க முடியாது என இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

தீபாவளி, ரம்ஜான் ஆகிய பண்டிகை தினங்களுக்கு இங்கிலாந்தில் அரசு விடுமுறை வழங்க வேண்டும் என இந்து, இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த சுமார் 1 லட்சத்து 21 ஆயிரத்து 843 பேர் கையெழுத்திட்டு ஆன் லைன் மூலமாக இங்கிலாந்து அரசுக்கு கோரிக்கை விடுத்தி இருந்தது. நீண்ட காலமாகவே இங்கிலாந்தில் வசித்து வரும் இந்து மற்றும் இஸ்லாம மதத்தை சேர்ந்தவர்கள் தீவாளி, ரம்ஜானுக்கு தேசிய போது விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரி வருகின்றார்.ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கையெழுத்திட்டு அனுப்பும் கோரிக்கைகளை பரிசீலிக்க இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தனி கமிட்டி உள்ளது. இந்த கமிட்டி கோரிக்கை மனுவை அரசுக்கு அனுப்பி வைத்தது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபாவளி, ரம்ஜான் போன்ற பண்டிகைகளை இங்கிலாந்தில் ஏராளமானோர் கொண்டாடிவருகின்றனர். பண்டிகைகள் முக்கியத்துவம் வாய்ந்தது. இருந்த போதிலும் அதற்காக அவற்றை தேசிய விடுமுறை தினங்களாக அறிவிக்கமுடியாது. அதிகமான பொது விடுமுறை காரணமாக நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும். மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கருதும் இங்கிலாந்து அரசு, அதேவேலையில் மக்களின் உணர்வுகளையும் மதிக்கிறது என்றும் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்