முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடியின் ஜப்பான் பயணம் ஒத்திவைப்பு

வெள்ளிக்கிழமை, 20 ஜூன் 2014      உலகம்
Image Unavailable

 

புது டெல்லி, ஜூன் 20 - நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் காரணமாக பிரதமர் மோடி அடுத்த மாதம் மேற்கொள்ளவிருந்த ஜப்பான் பயணம் ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை அடுத்த மாதம் முதல் வாரத்தில் கூட்டுவதற்கு பரிந்துரைப்பது என முடிவு செய்யப்பட்டது. 

பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் நாட்டுக்கு அடுத்த மாதம் சுற்றுப்பயணம் செய்வதாக இருந்தது. ஆனால் பட்ஜெட் கூட்டத் தொடரை கருத்தில் கொண்டு அவரால் அடுத்த மாதம் ஜப்பானில் சுற்றுப்பயணம் செய்ய முடியாது. இருப்பினும் ஜப்பான் பயணத்தை மோடி முக்கியமானதாக கருதுவதால் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவடைந்ததும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் அவர் ஜப்பானில் சுற்றுப்பயணம் செய்வார் என்று அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதனிடையே டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், டிராய் முன்னாள் தலைவர் நிருபேந்திர மிஸ்ராவை பிரதமரின் முதன்மை செயலாளராக நியமிப்பதற்கு வசதியாக முன்பு அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த அவசர சட்டம் சட்டமாக்கப்படவுள்ளது. இது தொடர்பான உத்தேச சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை தனது ஒப்புதலை அளித்துள்ளது. இதற்கான மசோதா வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்