முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜபட்சேவை எதிர்த்து போட்டியிடுகிறார் புத்த பிட்சு!

வெள்ளிக்கிழமை, 20 ஜூன் 2014      உலகம்
Image Unavailable

 

கொழும்பு, ஜூன்.21 - மூன்றாம் முறையாக இலங்கை அதிபர் பதவிக்குப் போட்டியிடும் மகிந்த ராஜபக்சேவை எதிர்த்து புத்த பிட்சு ஒருவர் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.

ராஜபக்சேவை எதிர்த்துப் போட்டியிடத் துணிந்த இந்தப் புத்தத் துறவியின் பெயர் மதுலவாவே சோபிதா. இவர் அதிபர் ஆட்சி முறையை ஒழிக்க தான் நடவடிக்கை எடுப்பேன் என்று இவர் உறுதியளித்துள்ளார். அதிபர் ராஜபக்சே 2015ஆம் ஆண்டு தொடக்கத்தில் தேர்தலை நடத்தவிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையில் போதுபல சேனை என்ற பவுத்த அமைப்பு முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்டு வரும் தருணத்தில் புத்த பிட்சுவின் இந்த அறிவிப்பு பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதற்கிடையே போதுபல சேனை அமைப்புக்கு எதிராக புதிய அமைப்பு ஒன்றை ஏற்படுத்த முயன்றதாகக் கருதப்பட்ட புத்தத் துறவி ஒருவர் தாக்கப்பட்டு சாலையோரத்தில் வீசியெறியப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்