முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈராக்கில் தாக்குதல் தொடுக்கத் அமெரிக்கா தயார்

வெள்ளிக்கிழமை, 20 ஜூன் 2014      உலகம்
Image Unavailable

 

பாக்தாத், ஜூன்.21 - ஈராக்கில் பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள் முன்னேறி வருவதுடன் முக்கிய எண்ணெய் நகரங்களையும் கைப்பற்றி வரும் நிலையில், அவர்களை கூறிவைத்து ராணுவ தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ஈராக்கில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலை முறியடிக்க, தேவைப்பட்டால் அவர்கள் மீது தாக்குதல் தொடுக்க தயாராக உள்ளோம். மேலும், அந்நாட்டு ராணுவத்துக்கு உதவி செய்ய 300 ராணுவ ஆலோசகர்களை அனுப்பவும் தயாராக் உள்ளோம். எனினும், அமெரிக்க துருப்புக்கள் அந்நாட்டுக்கு அனுப்பப்படாது , அங்கு உளவு மற்றும் கண்காணிப்புப் பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.

விமான தாக்குதல்களை நடத்தி தீவிரவாதிகளை முறியடிக்கும்படி அமெரிக்காவும் ஈராக் அரசு வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஈராக் மற்றும் லெவன்ட் இஸ்மாயில் தேச அமைப்பைச் சேர்ந்த சன்னி பிரிவு தீவிரவாதிகள் கடந்த வாரம் ஈராக் ராணுவ நிலையங்கள் மீது தீவிர தாக்குதல்களை நடத்தி எண்ணெய் வளம் மிக்க முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ளது. தற்போது தலைநகர் பாக்தாத்தை நெருங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈராக்கிற்கு அனைத்து வித உதவிகளையும் செய்யத் தயார் என்று அறிவித்த அமெரிக்கா, பாக்தாத்தில் போர்ப் பதற்றம் அதிகரித்ததால் தனது போர்க்கப்பலை பாரசீக வளைகுடா பகுதிக்கு அனுப்பி வைத்தது.

இதனிடையே, சவூதி அரேபியாவில் செய்தியாளர்களிடம் ஈராக் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹோஷியார் ஜெபாரி கூறுகையில், தீவிரவாதிகளுக்கு எதிராக விமான தாக்குதல்களை நடத்துமாறு அமெரிக்கா கேட்டுக் கோள்ளப்பட்டது, என்றார். பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றும் தங்கள் நாட்டவர்களை பாதுகாக்கும் பொருட்டு நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களை ஏற்கெனவே அமெரிக்கா அனுப்பியுள்ளது. இந்நிலையில் ஈராக்கிற்கான ஐக்கிய அரபு அமீரகத் தூதரை சவூதி அரேபியா திரும்ப அழைத்துக் கொண்டது. ஈராக்கில் வாழும் ஷியா பிரிவு அரசு, சிறுப்பான்மையினரான சன்னி பிரிவு முஸ்லிம்களை பாரபட்ச மனப்பான்மையுடன் நடத்துவதே தற்போது தீவிரவாதம் தலைதூக்க காரணம் என்று அமெரிக்க ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அமெரிக்க வெள்ளை மாளிகைச் செய்தித் தொடர்பாளர் ஜே கார்னி கூறுகையில், ஈராக்கில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள தீவிரவாதிகள் குறித்து ஈரான் மற்றும் பிற அண்டை நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம், என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago