முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலேசியாவில் மீண்டும் படகு விபத்து: 9 பேர் மாயம்

வெள்ளிக்கிழமை, 20 ஜூன் 2014      உலகம்
Image Unavailable

 

கோலாலம்பூர், ஜூன்.21 - மலேசி கடல் பகுதியில் நள்ளிரவில் படகு கவிழ்ந்த விபத்தில் காணாமல் போன 26 பேர் தேடப்பட்டு வரும் நிலையில், மீண்டும் மற்றொரு படகு விபத்துக்குள்ளானதில்  9 பேர் மாயமாகி விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அமெரிக்க கப்பல் படை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மலேசியாவிலிருந்து இந்தோனேசியா நோக்கிச் சென்ற அந்தப் படகு சேபாங் மாவட்டத்துக்கு அருகில் உள்ள தாடன்ஜங் பலாய் என்ற பகுதியில் மூழ்கி விபத்துக்குள்ளானது,. இந்த விபத்தையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 18 பேர் மீட்கப்பட்டனர் என்று அந்த அதிகாரி தெரிவித்தார். எனினும், காணாமல் போனவர்களின் உடல்கள் மீட்கப்பட்டது குறித்து அவர் தகவல் தெரிவிக்கவில்லை. முன்னதாக 97 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த படகு  கவிழந்து விபத்துக்குளானதில் 6 பேர் உயிரிழந்தனர். 26 பேர் தேடப்பட்டு வருகின்றனர்.

மலேசியாவில் சட்ட விரோதமாக இந்தோனேசியர்கள் குடியேறி வேலை செய்து வருகின்றனர். அவர்கள் தங்கள் நாட்டின் ரமலான் பண்டிகையை கொண்டாட செல்லும் விதமாக, இது போன்ற ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago