முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒபாமாவுக்கு கொலை மிரட்டல்: அமெரிக்கருக்கு சிறை

வெள்ளிக்கிழமை, 20 ஜூன் 2014      உலகம்
Image Unavailable

 

ஸ்க்ராண்டன், ஜூன்.21 - அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு இணையதளத்தின் மூலம் கொலை மிரட்டல் விடுத்த ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஒரு வருட சிறை தண்டனை விதித்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு தலைமை வழக்குரைஞர் பீட்டர் ஸ்மித்தின் அலுவலக வட்டாரங்கள் கூறியதாவது: வடகிழக்கு பென்சில்வேனியாவைச் சேர்ந்த நிக்கோலஸ் சவினோ என்பவர் வெள்ளை மாளிகை இணையதளத்தின் மூலமாக ஒபாமாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கடந்த ஆகஸ்ட் மாதம் நிகோலசை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு அந்நாட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் கடந்த மார்ச் மாதம் தன் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை நிக்கோலஸ் ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவருக்கு ஒரு வருட சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார் என்று தெரிவித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago