முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சல்மான் ருஷ்டிக்கு பின்டர் விருது

சனிக்கிழமை, 21 ஜூன் 2014      சினிமா
Image Unavailable

 

லண்டன், ஜூன்.21 - இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய எழுந்தாளர் சல்மான் ருஷ்டிக்கு பின்டர் விருது அளிக்கப்படுகிறது. 

இந்தியாவில் பிறந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டி(67), கடந்த 1988ம் ஆண்டு எழுதிய சாத்தானின் வேதங்கள் என்ற முதல் புத்தகத்துக்கு முஸ்லிம் சமுதாயத்தினரிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. சல்மான் ருஷ்டி பிடிபட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என ஈரான் முன்னாள் அதிபர் கொமேனி அப்போது அறிவித்தார். 

இதைத் தொடர்ந்து இங்கிலாந்தில் வசிக்கும் சல்மான் ருஷ்டிக்கு சிறப்பு பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இவர் எழுதிய 2-வது நாவலான மிட்நைட் சில்ட்ரன் என்ற புத்தகத்துக்கு புக்கர் விருது கிடைத்தது.

கடந்த பல ஆண்டுகளாக சல்மான் ருஷ்டி, பேச்சு சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளுக்காகவும், பல்வேறு சமூக அவலங்களுக்கு எதிராகவும் போராடி வருகிறார். அவரது பணியை பாராட்டி, மனித உரிமைகளுக்கான அவரது நடவடிக்கைகளுக்காக அவருக்கு ஆங்கில பின்டர் விருது வழங்கப்படுகிறது. 

வரும் அக்டோபர் 9ம் தேதி லண்டன் பிரிட்டிஸ் நூலகத்தில் நடைபெறும் விழாவில் இந்த விருது அவருக்கு வழங்கப்படும் என்று பின்டர் விருது தேர்வு கமிட்டியில் இருந்த எழுத்தாளரும்  பத்திரிகையாளருமான மவுரீன் பிரீலே நேற்று அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்