முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈராக்கில் தீவிரவாதிகளின் பிடியில் குண்டு தொழிற்சாலை

சனிக்கிழமை, 21 ஜூன் 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், ஜூன் 21 - ஈராக்கில் சன்னி பிரிவை சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மொசூல், திக்ரித், கிர்குக், பலூஜா உள்ளிட்ட நகரங்களை கைப்பற்றி உள்ளனர். தலைநகர் பாக்தாத்தை நெருங்கி வருகின்றனர். 

தற்போது அங்குள்ள பழைய ரசாயன குண்டு தொழிற்சாலையையும் தீவிரவாதிகள் கைப்பற்றி உள்ளனர். இது அல் முத்னானா என்ற இடத்தில் உள்ளது. வடமேற்கு பாக்தாத்தில் இருந்து 72 கி.மீ தொலைவில் இருக்கிறது. இது கடந்த 1980ம் ஆண்டுகளில் ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் காலத்தில் செயல்பட்டது. இத்தகவலை அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் ஜென் சகி தெரிவித்துள்ளார். 

சதாம் உசேன் பதவியில் இருந்த போது இங்கு நரம்பை செயல் இழக்க செய்யும் ரசாயன விஷம் கலந்த குண்டுகள் சரின் எனப்படும் ரசாயன ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டன. 1987 மற்றும் 1988ம் ஆண்டுகளில் நடந்த ஈராக் போரில் இங்கு 209 மற்றும் 394 டன் எடையுள்ள சரின் விஷ குண்டுகள் தயாரிக்கப்பட்டன. 

சர்வதேச நாடுகளின் நெருக்குதல் காரணமாக 1990ம் ஆண்டுகளில் அமெரிக்கா ஈராக் மீது போர் தொடுத்து ரசாயன குண்டு தொழிற்சாலையை அழித்தது. தற்போது தீவிரவாதிகள் பிடியில் இருக்கும் தொழிற்சாலையில் அவர்கள் விஷ குண்டு தயாரித்து இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அங்கு பழைய ஏற்கனவே விட்டு சென்ற பொருட்கள் மட்டுமே உள்ளது என்றும் ஜென் சசி தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago