முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிராந்திய ஒத்துழைப்பில் மோடி ஆர்வம்: அமெரிக்கா

சனிக்கிழமை, 21 ஜூன் 2014      இந்தியா
Image Unavailable

 

வாஷிங்டன், ஜூன் 22 - பிராந்திய ஒத்துழைப்பில் பிரதமர் நரேந்திர மோடி அதிக ஆர்வம் காட்டுகிறார் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நிர்வாகத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். 

நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் சார்க் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். ஆப்கா னிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாயும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். 

இதுகுறித்து ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானுக்கான அமெரிக்க சிறப்பு பிரதிநிதி ஜேம்ஸ் டாப் பின்ஸ் கூறியதாவது: நரேந்திர மோடி தனது பதவியேற்பு விழா வில் ஆப்கானிஸ்தான் அதிபர் கர்சாய், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆகியோர் பங்கேற்க அழைப்பு விடுத்தது பிராந்திய ஒத்துழைப்புக்கு அவர் முக்கியத்துவம் அளிப்பதை உணர்த்துகிறது. 

ஆப்கானிஸ்தான் ஸ்திரத்தன்மையோடு இருந்தால்தான் அண்டை நாடுகள் பாதுகாப்பாக இருக்க முடியும். அதன்காரண மாகவே அமெரிக்காவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் அதிபர் ஹமீது கர்சாய் கையெழுத்திட தாமதம் செய்தபோது சீனா, ரஷ்யா, இந்தியா, பாகிஸ்தான் நாடுகளின் தலைவர்கள் கர்சாயை தொடர்பு கொண்டு ஒப்பந்தத்தை இறுதி செய்ய வலியுறுத்தினர். 

ஆப்கானிஸ்தானில் மேலும் சில ஆண்டுகள் அமெரிக்க படைகள் தங்கியிருக்க ரஷ்யா, சீனா, இந்தியா, பாகிஸ்தான் ஆதரவு தெரிவித்திருப்பது வரவேற்கத் தக்கது. 

தீவிரவாதிகளின் சொர்க்க புரியாக ஆப்கானிஸ்தான் மாறி விடக் கூடாது என்று பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன. ஆப்கானிஸ்தான் வழியாக தங்கள் நாட்டுக்குள் போதைப் பொருள் கடத்தப்பட வாய்ப்பிருப்பதாக ரஷ்யா கவலை தெரிவித்துள்ளது என்றார். 

அமெரிக்க பாதுகாப்புத் துறை யின் ஆசிய, பசிபிக் பிராந்திய துணைச் செயலர் கெல்லி கூறியதா வது: பாகிஸ்தான், இந்தியா இடையே உறவு மேம்படுவது அந்த பிராந்திய அமைதிக்கு நல்லது. அண்மையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபும் சந்தித்துப் பேசியது ஆக்கப்பூர்வமான நடவடிக்கை. அந்தப் பிராந்தியத்தின் அமைதி தொடர்பாக ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளிடையே தனியாகவும் ஆப்கானிஸ்தான், இந்தியா இடையே தனியாகவும் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்