முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈராக்கில் மேலும் 4 நகரங்களை தீவிரவாதிகள் பிடித்தனர்

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜூன் 2014      உலகம்
Image Unavailable

 

பாக்தாத், ஜூன் 23 - ஈராக்கில் உள்நாட்டு போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில் மேலும் 4 நகரங்களை தீவிரவாதிகள் கைப்பற்றி உள்ளனர். 

ஈராக்கில் சன்னி பிரிவை சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் ஷியா பிரிவு அரசுக்கு எதிராக உள்நாட்டு போரில் ஈடுபட்டுள்ளனர். சிரியா மற்றும் ஈராக் பகுதிகளை இணைந்து இஸ்லாமிய நாடு உருவாக்க திட்டமிட்டுள்ளனர். ஈராக்கில் மொசூல், திக்ரித், கிர்குக், ஜலாலா உள்ளிட்ட பல நகரங்களை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். தலைநகர் பாக்தாத்தை நெருங்கி கொண்டிருக்கின்றனர். 

அவர்களை தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈராக் அரசு படைகளும் தீவிரமாக உள்ளன. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் சண்டை நடக்கிறது. இருந்தும் தீவிரவாதிகளின் கையே ஒங்கியுள்ளது. வடக்கு ஈராக்கில் முன்னேறி வரும் அவர்கள் அன்பர் மாகாணத்தில் மேலும் 4 நகரங்களை கைப்பற்றினர். அல்குயிம், ரவா, அனா மற்றும் ஹூசேபா ஆகிய நகரங்கள் தற்போது தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. 

அவற்றில் அல்குயிம் நகரம் சிரியாவின் எல்லையில் உள்ளது. இந்த 4 நகரங்களும் சிரியாவில் இருந்து ஈராக் தலைநகர் பாக்தாத் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. ஹ$சீபா நகரம் பாக்தாத்தில் இருந்து 100 கி.மீ தூரத்தில் உள்ளது. அன்பர் மாகாணத்தில் சன்னி பிரிவினருக்கு அவர்களின் மலைவாழ் இன மக்கள் ஆதரவாக உள்ளனர். அதனால்தான் பல நகரங்களை அவர்களால் கைப்பற்ற முடிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

அல்குயிம் நகரில் நேற்று முன்தினம் சண்டை தொடங்கியது. அதில் 11 ராணுவ வீரர்கள் பலியாகினர். 21 பேர் காயமடைந்தனர். அதே நேரத்தில் ரமாடியில் ராணுவம் நடத்திய குண்டு வீச்சில் 20 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago