முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முறையான விசா இல்லாமல் 121 இந்தியர்கள் சிக்கி தவிப்பு

திங்கட்கிழமை, 23 ஜூன் 2014      உலகம்
Image Unavailable

 

மொசூல், ஜூன்.24 - ஈராக்கில் தீவிரவாதிகள் பிடியில் உள்ள 39 இந்தியர்களை மீட்க முடியாத நிலையில், முறையான விசா இல்லாமல் சட்டவிரோதமாக நுழைந்த 121 இந்தியர்களும் வெளியேற முடியாமல் தவிப்பது தெரியவந்துள்ளது.

ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் பிரதமர் தூரி அல் மாலிக்கி தலைமையிலான அரசின் ராணுவ படையினருக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலான நகரங்களை சன்னி பிரிவினரான ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கௌப்பற்றியுள்ளனர். தற்போது, ஈராக்கில் சுமார் 10,000 க்கும் அதிகமான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். போர் நடைபெறாத இடஙஅகளில் இருப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அதே சமயம், மொசூல் நகரத்தை கைப்பற்றிய தீவிரவாதிகள் 40 இந்தயர்களை கடத்தி சென்றனர். அதில் ஒருவர் தப்பவே, 39 பேரை பிணைய கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர்.

இந்நிலையில், ஈராக்கின் பாக்தாத் நகரில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள கர்பலாவில் பஞ்சாப்பை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தங்கியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் துபாய்க்கு வேலைக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கிருந்து சுறிறுலா விசா மூலம் ஈராக் அழைத்து வரப்பட்டவர்கள். அழர்களது சுற்றுலா விசா கடந்த சில மாதங்களுக்கு முன்பே காலாவதியாகி விட்டது. எனினும், அவர்கள் வலுக்கட்டாயமாக நிறுவனங்களில் பணியாற்ற வைக்கப்பட்டு இருக்கின்றனர். தற்போது அந்த பகுதியிலும் தீவிரவாதிகள் நுழைந்து சண்டை நடக்கிறது. போர் நிலைமை தீவிரம், அடையவே, அந்த கம்பெனியில் பணியாற்றிய 121 பேர் வெளியாற விரும்பினார்கள். ஆனால், அந்த கட்டுமான கம்பெனி அவர்களை விட தயாராக இல்லை. பணிக்கான முறையான விசா இல்லாத காரணத்தால் அவர்கள் வெளியேற விரும்பினால், அந்த கம்பெனிகள் அரசிடம் சிக்கிக் கொண்டு விடும்.

சட்ட விரோதமாக அவகளை வேலையில் அமர்த்தியதற்காக ஒவ்வொரு தொழிலாளருக்கும் ரூ.30,000 வரை கம்பெனிகள் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். இதனால், அந்த நிறுவனங்களே அவர்களை்து வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிக்கித் தவிக்கும் அந்த 121 பேரும் ராஜஸ்தான் மாதிலத்தை சேர்நதவர்கள் என தெரிய வந்துள்ளது. ராஜஸ்தான் சிகார் மாவட்டத்தைச் சேர்ந்த 5 வயதான சரவணகுமார் ஈராக்கில் நஜாப் என்ற இடத்தில் வேலை செய்து வந்தார். அவருடன் மேலும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 15 பேர் தங்கியிருந்தனர். கடந்த 19-ஆம் தேதி தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே சண்டை நடைபெற்ற போது, இவர்கள் தங்கியிருந்த இடத்தின் சற்று அருகே தீவிரவாதிகள் வீசியகுண்டு விழுந்து வெடித்தது. இதில் ஏற்பட்ட அதிர்ச்சியில் சரவண குமாருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

தகவல் அறிந்த சரவண குமாரின் உறவினர்கள் அவரது உடலை இந்தியா கொண்டு வர முயற்சி மேற்கொண்டுள்ளனர். பெற்றொருக்கு சரவணகுமார் ஒரே மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். மாவட்ட நிர்வாகம் ஈராக்கில் தவிக்கும் 55 ராஜஸ்தான் மாநிலத்தவரை இந்தியா அழைத்துவர முயற்சி மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்