முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்க்கரை இறக்குமதி வரி உயர்வு: மத்திய அரசு

திங்கட்கிழமை, 23 ஜூன் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூன் 24 - மத்திய உணவு மற்றும் சிவில் சப்ளை துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் தலைமையில் உயர்நிலை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சர்க்கரைக்கான இறக்குமதி வரியை உயர்த்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இது குறித்து ராம்விலாஸ் பஸ்வான் கூறுகையில்,

உள்நாட்டு சர்க்கரை தொழிலை காக்க சர்க்கரைக்கான இறக்குமதி வரி உயர்த்தப்படுகிறது. 15 சதவீதத்தில் இருந்து 40 சதவீதம் உயர்த்தப்படுகிறது. சர்க்கரை ஆலைகளுக்கு கூடுதலாக ரூ. 4,400 கோடி வட்டியில்லா கடன் வழங்கப்படும். இதன் மூலம் கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகையை சர்க்கரை ஆலைகள் வழங்க உதவியாக இருக்கும். ஒரு டன்னுக்கு ரூ. 3,300 என்ற சர்க்கரை ஏற்றுமதிக்கான மானியம் செப்டம்பர் வரை நீட்டிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்