முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்யம் நிறுவன முறைகேடு வழக்கு: 26-ஆம் தேதி தீர்ப்பு

செவ்வாய்க்கிழமை, 24 ஜூன் 2014      இந்தியா
Image Unavailable

 

ஐதராபாத், ஜூன்.25 - சத்யம் கம்ப்யூட்டர் சர்வீஸ் நிறுவனத்தில் பல கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று முறைகேடு தொடர்பான வழக்கில், வரும் 26-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஆந்திர மாநிலத்தின் ஐதராபாத் நகர சிறப்பு நீதிமன்றத்தில் கூடுதல் தலாமை பெருநகர் மாஜிஸ்திரேட் சக்ரவர்த்தி முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கின் தீர்ப்பு இம்மாதம் 26-ஆம் தேதி வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார். அப்போது இந்த வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள சத்யம் கம்ப்யூட்டர் நிறுமனரும், முன்னாள் தலைவருமான பி.ராமலிங்க ராஜு மற்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ள மேலும் 9 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். ஐந்தரை ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கின் இறுதிக் கட்ட விசாரணை கடந்த வாரம் முடிவுக்கு வந்தது. இந்த வழக்கு தொடர்பாக 216 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். 3,038 ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

சத்யம் நிறுவனத்தின் வருவாய் அதிக அளவில் உள்ளதாக பல ஆண்டுகளாக மிகைப்படுத்தி கணக்குகாட்டி, முறைகேட்டில் ஈடுபட்டதை அந்த நிறுவனத்தின் தலைவராக இருந்த ராமலிங்க ராஜு ஒப்புக் கொண்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, நாட்டின் மிகப்பெரிய கணக்கு மோசடி என்று வர்ணிக்கப்பட்ட இந்த முறைகேடு 2009-ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி வெளிச்சத்துக்கு வந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்