முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொருளாதார வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 24 ஜூன் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூன்.25 - இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணம் இது என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கடற்படை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது இதனை தெரிவித்தார். மேலும் அவர் கூறும்போது, சரியான தருணத்தில் நடவடிக்கை மேற்கொள்வதன் மூலம் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி காண செய்வதோடு, முதலீட்டாளர்கள் நம்பிக்கையையும் திரும்பப் பெற முடியும். இந்தியப் பொருளாதாரம் கடந்த இரண்டு ஆண்டுகளாக மந்தநிலையில் இருந்து வந்ததால் தற்போது அதை மீட்டெடுப்பது மிகவும் சவாலானது. கடந்த 2 ஆண்டுகளாக இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து 5%-ல் இருந்துள்ளது.

இந்நிலையில், நான் நிதியமைச்சராக பொறுப்பேற்ற நாள் முதல், இந்தியப் பொருளாதாரத்தை மீண்டும் சரியான பாதையில் முன்னெடுத்துச் செல்வதற்கான ஆலோசனைகளை மேற்கொண்டதோடு, திட்டங்களையும் வகுத்து வருகிறேன், என்றார் ஜேட்லி. பணவீக்க உயர்வு, நிதிப் பற்றாக்குறை, வழக்கத்தைவிட குறைவான பருவமழை, இராக் உள்நாட்டு கிளர்ச்சியால் இந்தியாவில் ஏற்படும் பாதிப்புகள் என பல்வேறு சவால்களை நாடு எதிர்கொண்டுள்ள நிலையில், பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

பொருளாதாரத்தை சீர்படுத்த கசப்பு மருந்து கொடுக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடியும் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்