முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை - அகமதாபாத் அதிவேக ரயில்: பிரதமர் திட்டம்

செவ்வாய்க்கிழமை, 24 ஜூன் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூன்.25 - பிரதமர் நரேந்திர மோடி மும்பை-அகமதாபாத் இடையே அதிவ்க ரயில் விடும் திட்டத்தை செயல்படுத்த பரிந்துரை செய்துள்ளார்.

அதன் அடிப்படையில் இந்தியாவின் முதல் அதிவேக ரயில் மும்பை-அகமதாபாத் இடையே விடப்படுகிறது. இதன் திட்டம்திப்பீடு பணி ஏற்கெனவே தொடங்கி விட்டது. மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் விடுவதற்கான தண்டவாளம் அமைப்பது மற்றும் அடிப்படை பணிகள் தேவைகள் குறித்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

மும்பை-அகமதாபாத் இடையே 543 கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிய அதிவேக ரயில் பாதை அமைக்கப்படுகிறது. இதற்காக ரூ.70 ஆயிரம்கோடி செலவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சர்வதரமிக்க அதிவேக ரயில் பாதையாக இது அமையும். இதில் வேறு ரயில்கள் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. மோடியின் தொலை நோக்கு திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் ரயில் மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் செல்லும். இதற்கான அனைத்துப் பொருட்களும் வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படுகின்றன.

இந்த அதிவேக ரயிலை 2017-ஆம் ஆண்டு இயக்க வேண்டும் என்று மோடி விருப்பம் தெரிவித்துள்ளார். அதற்கு ஏற்ப பணிகளை விரைவாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வைர நாற்கர ரயில்வே திட்டத்தில் இந்த அதிவேக ரயில் முக்கிய அகம் வகிக்கும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்