முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்ய அதிபர் புடினுக்கு ஒபாமா மீண்டும் எச்சரிக்கை

செவ்வாய்க்கிழமை, 24 ஜூன் 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், ஜூன்.25 - உக்ரைன் நாட்டில் பிரிவினைவாதிகளுக்கு ஆயுதம் அளிப்பதை நிறுத்திக் கொண்டு அமைதியை ஏற்படுத்த ரஷ்யா முன் வர வேண்டும் என்றும், இல்லாவிட்டால் மேலும் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைன் நாட்டில் கிழக்கு பகுதியில் ராணுவத்தை எதிர்த்து பிரிவினை வாதிகள் ஆயுதங்களுடன் போராடி வருகின்றனர். ஏற்கனவே கிரீமியாவை கைப்பற்றிய ரஷ்யா, அந்த பிரிவினைவாதிகளுக்கு ஆயுத உதவி செய்து வருகிறது. மேலும், உக்ரைனுக்குல் மறைமுகமாக நுழையவும் ரஷ்யா நினைக்கிறது. இந்த நிலையில், உக்ரைன் நாட்டு விவகாரத்தில் தலையிடுவதை ரஷ்யா நிறுத்தாவிட்டால் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக, ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட ஜி7 நாடுகள், சில பொருளாதார தடைகளை விதித்தன. அதன் பின் ரஷ்யா சிறிது யோசிக்க ஆரம்பித்தது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று முன்தினம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது அவர் உக்ரைன் விவகாரத்தில் ஷ்யா இன்னும் சரியான திசைக்கு வரவில்லை என சுட்டிக்காட்டினார்.

உக்ரைனில் தீவிரவாதிகளுக்கு ஆயுதம் அளிப்பதை நிறுத்திக் கொண்டு, அங்கு அமதி திரும்ப ரஷ்யா ஒத்துழைக்க வேண்டும் . அப்படியில்லாவிட்டால், மேலும் பல பொருளாதார தடைகளை விதிக்க வேண்டியிருக்கும் என்று புடினுக்கு ஒபாமா எச்சரிக்கை விடுத்தார். அதை ஒபாமாவின் செயலாளர் ஜோஸ் எர்னஸ்ட் நிருபர்களிடம் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago