முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலியாவை வீழ்த்திய ஸ்பெயினுக்கு ஆறுதல் வெற்றி

செவ்வாய்க்கிழமை, 24 ஜூன் 2014      விளையாட்டு
Image Unavailable

 

ரியோடிஜெனிரோ, ஜூனா்.25 - உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஏற்கெனவே வெளியேறிவிட்ட நடப்பு சாம்பியனான ஸ்பெயின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது.

20வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் பிரேசிலில் நடைபெற்று வருகின்றன. நடப்பு சாம்பியான ஸ்பெயின் தமது முதல் 2 போட்டிகளிலும் படுகேவலமாக விளையாடி அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறாமல் போனது. இறுதிப் போட்டியாக நேற்று ஆஸ்திரேலியாவுடன் ஸ்பெயின் மோதியது. இதில் வென்றாலும் அடுத்த சுற்று தகுதி பெற முடியாது என்ற போதும் ஆறுதல் வெற்றிக்காக ஸ்பெயின் மோதியது.

ஆட்டத்தின் 5வது நிமிடத்தில் ஸ்பெயினின் அலோன்சோவும், 6வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் ஜேடினாக்கும் பவுல் செய்தனர். 12வது நிமிடத்தில் மீண்டும் ஸ்பெயினின் டேவிட் வில்லா பவுல் செய்தார். 17வது நிமிடத்தில் ஸ்பெயினின் காசரோலா அடித்த பந்தை ஆஸ்திரேலியாவின் ஸ்பிரானோவிக் கோல் விழாமல் லாவமாக தடுத்தார்.

பின்னர் 36வது நிமிடத்தில் ஸ்பெயினின் டேவிட் வில்லா தனது அணிக்கு முதல் கோலை அடித்தார். பின்னர் முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது. மீண்டும் ஆட்டம் தொடங்கியவுடன் 47வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் ஹல்லோரன் பவுல் செய்தார். ஆட்டம் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருந்த நிலையில் 56வது நிமிடத்தில் ஸ்பெயினின் டேவிட் வில்லாவுக்கு பதிலாக மாட்டா களமிறங்கினார். 69வது நிமிடத்தில் ஸ்பெயினின் டோரஸ் மீண்டும் ஒரு கோல் அடித்து தங்கள் அணியின் கோல் கணக்கை இரண்டாக உயர்த்தினார். மீண்டும் 82வது நிமிடத்தில் ஸ்பெயினின் மாட்டா மேலும் ஒரு கோல் அடிக்க அந்த அணியின் கோல் கணக்கு மூன்றாக உயர்ந்தது.

ஆட்ட முடிவில் 0-3 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை ஸ்பெயின் வீழ்த்தியது. ஆட்டநாயகனாக ஸ்பெயினின் டேவிட் வில்லா தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த ஆறுதல் வெற்றியுடன் நடப்பு உலகக் கோப்பை போட்டிகளில் இருந்து ஸ்பெயின் வெளியேறியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்