முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிலியை 2-0 என்று அபாரமாக வீழ்த்தியது நெதர்லாந்து

செவ்வாய்க்கிழமை, 24 ஜூன் 2014      விளையாட்டு
Image Unavailable

 

சாவ் பாவ்லோ, ஜூன்.25 - நடப்பு சாம்பியனான ஸ்பெயினை விரட்டியடித்த சிலியின் சிலிர்ப்பை நெதர்லாந்து அடக்கிவிட்டது. உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் சிலியை நெதர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

இரு அணிகளுக்கு இடையேயான ஆட்டம் தொடங்கிய 2வது நிமிடத்திலேயே நெதர்லாந்தின் லென்ஸுக்கு பவுல் கிடைத்தது. ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் மீண்டும் லென்ஸ் 2வது முறையாக பவுல் ஆனார். ஆட்டத்தின் 25வது நிமிடத்தில் சிலி அணியின் சில்வா பவுல் செய்தார்.

முதல் பாதி ஆட்டம் முடிந்தபோது இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. பின்னர் இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கி நடைபெற்றது. 46வது நிமிடத்தில் சிலியின் அலெக்சிஸ் பவுல் ஆனார். 64வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் ப்ளைண்ட்டிற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. ஆனாலும் எவருமே கோலடித்த பாடு இல்லை.

இந்நிலையில் ஆட்டத்தின் 69வது நிமிடத்தில் நெதர்லாந்து அணியில் லென்சுக்கு பதிலாக மெம்பிஸ் களமிறங்கினார். 77வது நிமிடத்தில் நெதர்லாந்தின் பெர் அசத்தலான கோல் அடித்து முன்னிலைக்கு வழி வகுத்தார். அதைத் தொடர்ந்து 90வது நிமிடத்தில் நெதர்லாந்தின் மெம்பிஸ் மற்றொரு அழகான கோல் அடித்து 2 கோலாக உயர்த்தினார்.

ஆட்டம் முடியும் வரை சிலி வீரர்கள் கோல் அடிக்கவே முடியாமல் போராடினர். இதனால் நெதர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் சிலியை வென்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago