முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உணவு பொருள் பண வீக்கத்தை கட்டுப்படுத்த ஆலோசனை

புதன்கிழமை, 25 ஜூன் 2014      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூன்.26 - உணவுப் பொருட்கள் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநிலங்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக வருகிற ஜூலை 4ம் தேதி டெல்லிக்கு வரும்படி மாநில உணவு துரை அமைச்சர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

மத்தியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள பிரதமர் மோடி தலைமையிலான பாஜ அரசு கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கஜானவை காலி செய்து விட்டதாக குற்றம் சாட்டி வருகிறது. நாட்டில் பண வீக்கம், விலைவாசி உயர்வு போன்ற நெருக்கடிகளுக்கு மத்தியில் ஆட்சி பொறுப்பை தொடங்க வேண்டிய நிலையில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பண வீக்கம், உணவு பொருட்கள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு ஆகியவற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது. இது தொடர்பாக மாநில அரசுகளுடன் கலந்தாலோசனை நடத்தி புதிய முடிவுகளை எடுக்க பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆலோசித்து வருகிறது. குறிப்பாக உணவு பொருட்கள் பண வீக்கத்தை கட்டுப்படுத்த மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளது. வருகிற ஜூலை 4ம் தேதி டெல்லிக்கு வரும்படி மாநில உணவு துறை அமைச்சர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மத்திய உணவு மற்றும் பொது வினியோக துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானும் பங்கேற்கிறார்.

இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் விஷயங்கள் குறித்து இன்னும் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. பதுக்கல்காரர்கள் மீது நடவடிக்கை, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீதான விலை கட்டுப்பாடு, தானியங்கள் கையிருப்பு நிலவரம் உள்ளிட்ட விவகாரங்கள் பேசப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago