முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் இருந்து பால் பொருட்கள் இறக்குமதி தடை நீடிப்பு

புதன்கிழமை, 25 ஜூன் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூன் 25 - சீனாவில் இருந்து பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை மேலும் ஓராண்டு காலத்துக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.

இது குறித்து வெளிநாட்டு வர்த்தக துறை தலைமை இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சீனாவில் இருந்து பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் இறக்குமதி செய்ய விதிக்கப்பட்ட தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு ஜூன் மாதம் 23ம் தேதி அல்லது அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் காலம். இது எது முன்கூட்டியோ அது வரை இந்த தடை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களில் பிளாஸ்டிக் மற்றும் உரங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் மெலமின் எனும் பொருள் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சீனாவில் இருந்து பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கட்த 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதன் முறையாக தடை விதிக்கப்பட்டது. இந்த தடை காலம் ஜூன் 23ம் தேதி நிறைவடைகிறது. எனினும் ஒவ்வோர் ஆண்டும் அந்த தடையை மத்திய அரசு நீட்டித்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago