முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலிபான்களிடம் இருந்து முக்கிய நகரங்கள் மீட்பு

வெள்ளிக்கிழமை, 27 ஜூன் 2014      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், ஜூன்.28 - பாகிஸ்தானில் ஆப்கன் எல்லையில் வடக்கு வஜிரிஸ்தானில் மாகாணம் உள்ளது. இங்குதான் தலிபான் தீவிரவாதிகள் முகாம்கள் அமைத்து, வெடிகுண்டுகள் தயாரிப்பிலும், தீவிரவாத செயல்களிலும் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் இம்மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 15-ஆம் தேதி முதல் பாகிஸ்தான் ராணுவம் அதிரடியாக வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இந் தாக்குதலில் 300 தலிபான் தீவிரவாதிகள் பலியாகியுள்ளனர். அங்கு வசிக்கும் ஏராளமான மக்கல் உயரி தப்பினால் போதும் எனபயந்து, பான்னு, லக்கி மார்வாத் மற்றும் தேரா இஸ்லாமாயில்கான் ஆகிய நகரங்களுக்குள் தப்பியோடினர். அந்த நகரங்களில் அவர்களுக்கு நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இதற்கிடையே வஜிரிஸ்தான் மாகாணத்தில் மிரான்ஷா நகரில் நேற்று முன் தினம் 6 மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தின் தரைப்படையினர் அதிரடி பீரங்கிதாக்குதல் நடத்தினர். தலிபான் தீவிரவாதிகளின் முகாம்களை அழித்தனர். மிரான்ஷா நகரம் பாகிஸ்தான் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ரம்ஜான் நோன்பு துவங்குவதற்கு முன் தலிபான் தீவிரவாதிகளின் முகாம்களை முழுமையாக அழித்து விடுவோம் என்று பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்