முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரான்ஸ் அதிபர் அழைப்பு

வெள்ளிக்கிழமை, 27 ஜூன் 2014      இந்தியா
Image Unavailable

 

மும்பை, ஜூன்.28 - பாரிஸ் மருமாரு பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரான்ஸ் அதிபர் ஹோலன்டே அழைப்பு விடுத்துள்ளார். குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு கோத்ரா சம்பவத்தை தொடர்ந்து பயங்கர கலவரம் மூண்டது. இதில் ஆயிரக்கணக்கான சிறுபான்மையினர் கொல்லப்பட்டனர். அப்போது முதல்வராக இருந்த நரேந்திர மோடி கலவரத்தை தடுக்க தவறி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக அமெரிக்க அரசு அவருக்கு விசா வழங்க தடை விதித்தது. ஐரோப்பிய நாடுகளும் மோடிக்கு எதிரான நிலையை எடுத்தன. 3 முறை அவர் தொடர்ந்து குஜராத் முதல்வராக மக்களால தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரும் அமெரிக்கா தனது நிலையை மாற்றிக் கொள்ளவில்லை.

இந்நிலையில், 2014 மக்களவை தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனாநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்று அறுதிப்பெரும் பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்தது. பாஜ தலைவர் நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டனர். அவருக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா உள்பட உலக தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அமெரிக்கா வருமாறு ஒபாமா அழைப்பு விடுத்தார். மோடிக்கு விசா வழங்குவதில் எந்த பிரச்னையும் இல்லை என அமெரிக்கா செல்ல இருக்கிறார். அப்போது அமெரிக்க நாடாளுமன்றத்தில் அவர் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பிரான்ஸ் அதிபர் ஹோலண்டேவும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்திருப்பதாக மும்பையில் உள்ள பிரான்ஸ் தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆண்டு இறுதிக்குள் பிரான்ஸ் வருமாறு மோடிக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்த பின்னர் ஆகஸ்ட மாதம் மோடி ஜப்பான் செல்கிறார். அதன் பின் அவர் பிரான்ஸ் பயணம் மேற்கொள்ளக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 98-ஆம் ஆண்டு முதல் இந்தியா பிரான்ஸ் இடையே ஆழமான நட்பு நிலவி வருகிறது. குஜராத் சம்பவத்துக்காக மோடிக்கு எதிராக பிரான்ஸ் அரசு விசா மறுப்பு உள்ளிட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்