முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈராக் தீவிரவாதிகள் மீது தாக்குதலுக்கு அமெரிக்கா தயார்

சனிக்கிழமை, 28 ஜூன் 2014      உலகம்
Image Unavailable

 

பாக்தாத், ஜூன் 29 - ஈராக்கில் ஷியா அரசுக்கு எதிராக சன்னி பிரிவை சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் உள்நாட்டு போரில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இவர்களுக்கும், அரசு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இதில் தீவிரவாதிகளின் கை ஓங்கியுள்ளது. மொசூல், திக்ரித், கிர்குக், பலூஜா, பாய்ஜி உள்ளிட்ட பல நகரங்களை பிடித்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அவற்றை மீட்க ராணுவம் கடும் பிரயத்தனம் செய்கிறது. ஆனால் முடியவில்லை. ஆனால் தீவிரவாதிகளை அடக்கி கட்டுப்படுத்த முடியவில்லை. காரணம் அவர்களிடம் அதிநவீன போர்க்கருவிகள் உள்ளன. அவற்றை சன்னி பிரிவை சேர்ந்த அண்டை நாடுகள் வழங்கி உள்ளன.

மேலும் அவர்களுக்கு மறைமுக ஆதரவு அளித்து வருகின்றனர். ஈராக் ராணுவத்தில் உள்ள சன்னி பிரிவு வீரர்களும் போரில் ஈடுபட மறுக்கின்றனர். இது போன்ற காரணங்களால் அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஈராக்கில் முகாமிட்டிருந்த அமெரிக்க படைகள் 2011ம் ஆண்டில் வெளியேறின. அதன் பிறகுதான் அங்கு தீவிரவாதிகள் கை ஓங்கியது. அங்கு முகாமிட்டிருந்த போது ஆயிரக்கணக்கான அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர். பலத்த சேதம் ஏற்பட்டது.

தற்போது நிலைமையை சமாளிக்க மீண்டும் அமெரிக்க உதவியை ஈராக் நாடியது. ஆனால் ஏற்கனவே ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் உடனடியாக அதில் தலையிட விரும்பவில்லை. நிலைமையை உற்று கவனிப்பதாக ஒபாமா தெரிவித்தார். ராணுவத்தை அனுப்ப மாட்டோம் என்றும் அறிவித்தார். ஆனால் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் அங்கு முகாமிட்டுள்ள ராணுவ வீரர்களை பாதுகாக்க 300 ஆலோசகர்களை அனுப்புவதாக அறிவித்தார். அவர்கள் ஈராக் ராணுவ வீரர்களுக்கு போர் பயிற்சிகளை அளிக்க உள்ளனர்.

இந்த நிலையில் தற்போது 180 பேர் பாக்தாத் வந்து விட்டனர். ஆலோசகர்களாக இருந்தாலும் அவர்கள் ராணுவ வீரர்கள் ஆவர். இதற்கிடையே தீவிரவாதிகளையும் அவர்களின் இருப்பிடங்களையும் கண்காணிக்க ஆளில்லா விமானங்கள் பறக்க விடப்படும் என்று அமெரிக்கா அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று முன்தினம் முதல் தலைநகர் பாக்தாத் நகரின் மீது அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் பறந்து வட்டமடிக்கின்றன. அவற்றில் ஹெல்பயர் என்ற ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன.

தற்போது அவை சன்னி தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தவில்லை. அவர்களின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றன. ஆனால் நிலைமை மேலும் மோசமடையும் பட்சத்தில் தீவிரவாதிகள் மீது வான்வழி தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராக இருப்பதையே அது காட்டுகிறது. இந்த தகவலை அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் செய்தி தொடர்பாளர் ரியர் அட்மிரல் ஜான்கிர்பி தெரிவித்துள்ளார்.

ஈராக்கின் பாக்தாத் நகரின் மீது ஆளில்லா விமானங்களுடன் ஆட்கள் இயக்கும் விமானங்களும் பறந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. தற்போது அவை பொதுமக்களின் பாதுகாப்புக்காக வானில் வட்டமிடுகின்றன. அதே நேரத்தில் தேவைப்படும் போது தாக்குதல் நடத்தப்படும் வாய்ப்பு ஏற்படலாம் என்றும் சூசகமாக கூறியுள்ளார். இதற்கிடையே தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் திக்ரித், கிர்குக் உள்ளிட்ட நகரங்களில் இந்திய தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அவர்களை அழைத்து வர மத்திய அரசு போர்க்கப்பலை அனுப்புகிறது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மேலும் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கி தவிக்கும் 39 இந்திய கட்டிட தொழிலாளர்களை மீட்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago