முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உருகுவேயை வீழத்தி காலிறுதிக்கு முன்னேறிய கொலம்பியா

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜூன் 2014      விளையாட்டு
Image Unavailable

 

ரியோடி ஜெனீரோ, ஜூன்.30 - உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற ஆட்டத்தில் உருகுவேயை கொலம்பியா 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்து வரலாறு படைத்தது கொலம்பியா.

ஆட்டம் தொடங்கும் விசில் ஊதப்பட்டவுடனேயே கோல் கீப்பர் உட்பட கொலம்பியாவின் அனைத்து வீரர்களும் சுறுசுறுப்படைந்தனர். அனைவரையும் பயன்படுத்தும் அபாரமான உத்திக் கையாளப்பட்டது. மாறாக உருகுவே தடுமாட்டத்தில் இறங்கியது. மைதானத்தின் ஸ்கோர் போர்டு பந்து 70% கொலம்பியாவிடமே இருந்தது என்று காண்பித்தபோது கொலம்பிய ரசிகர்கள் வெற்றி பெருமிதம் காண்பித்தனர்.

அரைமணி நேரத்திற்கு சற்று முன்னால் தலையால் பந்தை முட்டி டென்னிஸ் போல் மாறி மாறி ஆட ஜேம்ஸ் ரோட்ரிகஸ் ஒரு பந்தை அபாரமாக மார்பினால் கட்டுப்படுத்தி திரும்பி பந்து ஃபுல்டாஸாக இருக்கும்போதே அப்படியே இடது காலால் மிக ஸ்டைலாக உதைத்தார். பந்து கோல் ஆனது. ஒருவரும் ஒன்றும் செய்ய முடியவில்லை. கொலம்பியா பெரும்பாலும் ஸ்பெயின் போலவே முக்கோண வடிவமைப்பில் ஷார்ட் பாஸ்களைச் செய்து விளையாடியது. ஆனாலும் பயனில்லை.

இடைவேளையின் போது கொலம்பியா 1- 0 என்று இருந்தது. சுவாரேஸ் இல்லாததால் உற்சாகம் குன்றிக் காணப்பட்ட உருகுவே அணிக்கு இடைவேளைக்குப் பிறகு 50வது நிமிடத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. இந்தத் தருணத்தில் கொலம்பிய வீரர்கள் பந்தை இடது வலது புறம் என்று மாறி மாறி பாஸ் செய்து வந்தனர் சுமார் 3வது பாஸில் கொலம்பியாவின் ஆர்மீரோ இடது புறம் மார்க் செய்யப்படாமல் சுதந்திர ஜீவியானார், அவர் லாங் ஷாட்டை அடித்தார் அங்கு தடுப்பு வீரராக நின்று கொண்டிருந்த குவாடிராடோ தலையால் முட்டி மைதானத்தின் மையத்திற்கு அனுப்பினார்.அப்போது மீண்டும் ரோட்ரிகஸ் வந்து காலியாக இருந்த வலையில் கோலைச் செலுத்தினார். இதுவே பின்பு வெற்றி கோலாக அமைந்தது. இந்த உலகக் கோப்பையில் ஜேம்ஸ் ரோட்ரிகஸ் அடிக்கும் 5வது கோல் ஆகும் இது.

64வது நிமிடத்தில் இடது உள்புறத்திலிருந்து உருகுவே வீரர் கிறிஸ்டியன் ரோட்ரிக்ஸ் சீறிப்பாய்ந்து வந்தார் பந்தை ஆக்ரோஷமாக வலது புறம் கீழாக கோல் நோக்கி அடித்தார். ஆனால் கொலம்பியாவின் ஆஸ்பீனோ மீண்டும் பாய்ந்து தட்டி விட்டார். உருகுவே இந்த ஆட்டத்தில் செய்த சிறந்த கோல் முயற்சி இதுவே.

கடைசி வரை உருகுவேயின் முயற்சிகள் நிறைவேறவில்லை. கொலம்பியா முதன் முதலாக உலகக் கோப்பை காலிறுதிக்குத் தகுதி பெற்று வரலாறு படைத்தது. காலிறுதியில் பிரேசிலைச் சந்திக்கிறது கொலம்பியா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்