முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்தி., சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன்: பட்டம் வென்ற சாய்னா

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜூன் 2014      விளையாட்டு
Image Unavailable

 

சிட்னி, ஜூன்.30 - ஆஸ்திரேலியன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

சிட்னியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், ஸ்பெயினின் கரோலினா மெரினை எதிர்கொண்டார் சாய்னா. 43 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில், சாய்னா 21-18, 21-11 என்ற நேர் செட்களில் கரோலினாவை அபாரமாக வீழ்த்தினார். ஆட்டத்தின் துவக்கம் முதலே சாய்னாவின் ஆதிக்கம் மிகுந்திருந்தது. சாய்னாவின் வேகத்துக்கும் சாதுர்யத்துக்கும் கரோலினாவால் ஈடுகொடுக்க முடியவில்லை. 21 வயதால சாய்னா, இந்த மகத்தான வெற்றியின் மூலம் 750,000 அமெரிக்க டாலர் பரிசுத் தொகையுடன் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

முன்னதாக, சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் சீனாவின் சிக்சியான் வாங்கை சாய்னா நெவால் எதிர்கொண்டார். சர்வதேச மகளிர் பாட்மிண்டன் தரவரிசையில் சாய்னா 6-வது இடத்திலும், வாங் 2-வது இடத்திலும் உள்ளனர். இவர்களுக்கு இடையிலான மோதல் சுமார் 1 மணி நேரம் 16 நிமிடங்கள் வரை நீடித்தது. இதில் 21-19, 16-21, 21-15 என்ற கணக்கில் சாய்னா வெற்றி பெற்றார். தற்போது ஆஸ்திரேலியன் சூப்பர் சீரிஸில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் இந்த ஆண்டில் 2-வது பட்டத்தை சாய்னா வசமாக்கினார். முன்னதாக இந்த ஆண்டில் டெல்லியில் நடைபெற்ற இண்டியன் ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் சாய்னா தங்கப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, வாங்கை வென்றது குறித்த தனது மகிழ்ச்சியை சாய்னா நெவால் ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார். மிகக் கடுமையான ஓர் அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளேன் என்று சாய்னா அதில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு முன்பு வாங்கை சாய்னா எதிர்கொண்ட ஆட்டங்களில் கடைசி இரண்டில் தோல்வியடைந்துள்ளார். இருவரும் இதுவரை 8 ஆட்டங்களில் மோதியுள்ளனர். இதில் சாய்னா ஐந்து ஆட்டங்களிலும், வாங் 3 ஆட்டங்களிலும் வென்றிருந்தது நினைவுகூரத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்