முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனவை பாதுகாக்க வலுவான கட்டமைப்பு: ஜின்பிங்

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜூன் 2014      உலகம்
Image Unavailable

 

பெய்ஜிங்,ஜூன்.30 - சீனாவை அச்சுறுத்தும் அந்நிய சக்தி களை எதிர்கொள்ள வலுவான எல்லைப் பாதுகாப்பு கட்ட மைப்பை உருவாக்க வேண்டும் என்று அந்த நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் ராணுவத்தை அறிவுறுத்தி யுள்ளார்.

சீன எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகளின் தேசிய ஆலோ சனைக் கூட்டம் பெய்ஜிங்கில் வெள் ளிக்கிழமை நடைபெற்றது. இதில் அதிபர் ஜி ஜின்பிங் பேசியதாவது: சீனாவின் நிலப்பரப்பு, கடல் பகுதிகளில் அந்நிய சக்திகள் நூற்றுக்கும் மேற்பட்ட முறை ஊடு ருவி ஆக்கிரமித்துள்ளன. அப் போது சீனா பலவீனமாக இருந் தது. இப்போது நாம் பலம்வாய்ந்த நாடாக உருவெடுத்துள்ளோம்.

கடந்த கால கசப்பான சம்பவங் களை நினைவுகூர்ந்து நமது கடல், நிலம் சார்ந்த எல்லைப் பாது காப்பில் மிகவும் வலுவான கட்ட மைப்பை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இரண்டாம் உலகப்போரின் போது சீனாவின் பல்வேறு பகுதி களை ஜப்பான் கைப்பற்றியது. அதை மறைமுகமாக சுட்டிக் காட்டி ஜி ஜின்பிங் உரையாற்றினார்.

கடந்த சில ஆண்டுகளாக தெற்கு சீன கடல் பகுதி எல்லை விவகாரத்தில் ஜப்பான், வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புருனே ஆகிய நாடுகளுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. மேலும் நிலப்பரப்பு எல்லையில் இந்தியா, பூடானின் சில பகுதிகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்