முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் - டீசல் விலை மீண்டும் உயர்வு

திங்கட்கிழமை, 30 ஜூன் 2014      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூலை.01 - பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.69, டீசல் விலை லிட்டருக்கு 50 பைசா அதிகரிக்கப்பட்டது. இந்த விலை அதிகரிப்பு நேற்று நள்ளிரவு முதல் அமுலாகியது.

இந்த விலை மாற்றம், உள்ளூர் வரி, வாட் வரிக்கு ஏற்ப அந்தந்தப் பகுதிகளில் விலை அதிகரிப்பு அமலுக்கு வருகிறது.

சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப 15 நாள்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பும் வீழ்ச்சி கண்டுள்ளது. அதையொட்டி, பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்