முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செப்.,-1-முதல் புதிய கால அட்டவணைப்படி ரெயில் இயக்கம்

திங்கட்கிழமை, 30 ஜூன் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.1 - புதிய ரெயில்வே கால அட்டவணை வருகிற செப்டம்பர் 1-ந் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது. அதன்படி 8 எக்ஸ்பிரஸ் ரெயில்கள், அதிவேக (‘சூப்பர் பாஸ்ட்’) எக்ஸ்பிரஸ் ரெயில்களாக மாற்றப்படுகின்றன.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

புதிய கால அட்டவணை

நடப்பாண்டில் ரெயில்களுக்கான புதிய கால அட்டவணை வருகிற செப்டம்பர் 1-ந் தேதி நடைமுறைக்கு வருகின்றன. அதுவரையிலும், (ஆகஸ்ட் 31-ந் தேதி வரை) பழைய ரெயில் கால அட்டவணை தொடரும். மேலும், ஜூலை மாதத்தில் 8 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் அதிவேக ரெயில்களாக மாற்றப்படவுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

சென்னை சென்டிரலில் இருந்து மங்களூர் நோக்கி புறப்படும் சென்னை சென்டிரல்-மங்களூர் வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் ஜூலை 13-ந்தேதி முதல் அதிவேக ரெயிலாக இயக்கப்படுகிறது. அதேபோல மறுமார்க்கமாக வரும் மங்களூர்-சென்னை சென்டிரல் வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில், சென்னை சென்டிரல்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயில், சென்னை சென்டிரலில் இருந்து புறப்படும் சென்னை சென்டிரல்-ஈரோடு ஏற்காடு எக்ஸ்பிரஸ், பழனி எக்ஸ்பிரஸ் ரெயில் (இருமார்க்கமாக) ஜூலை 13-ந் தேதி முதல் ‘சூப்பர் பாஸ்ட்’ எக்ஸ்பிரஸ் ரெயில்களாக மாற்றப்படுகின்றன.

சென்னை சென்டிரல் வழியாக செல்லும் திருவனந்தபுரம்-ஷாலிமார் எக்ஸ்பிரஸ் ஜூலை 12-ந் தேதியிலும், கோவை வழியாக செல்லும் எர்ணாகுளம்-பாட்னா வாரம் இருமுறை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் சென்னை வழியாக செல்லும் திருவனந்தபுரம்-இன்டோர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகியவை ஜூலை 14-ந்தேதியிலும் ‘சூப்பர் பாஸ்ட்’ ரெயில்களாக இயக்கப்பட உள்ளன.

ஜூலை 1-ந் தேதி முதல் கோவை வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. சென்னை சென்டிரலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி செல்லும் சென்னை சென்டிரல்-திருவனந்தபுரம் மெயில் (வண்டி எண்:-12623) அதிகாலை 2.45 மணிக்கு கோவை ரெயில் நிலையத்துக்கு வந்தடையும். அதேபோல மறுமார்க்கமாக வரும் திருவனந்தபுரம்-சென்னை சென்டிரல் மெயில் (12624) இரவு 11.45 மணிக்கு கோவையை சென்றடையும்.

யஷ்வந்த்பூரில் இருந்து புறப்படும் யஷ்வந்த்பூர்-கன்னூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (16527) அதிகாலை 3.20 மணிக்கும், மறுமார்க்கமாக வரும் கன்னூர்-யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (16528) இரவு 11.35 மணிக்கும் கோவை ரெயில் நிலையத்தை வந்தடையும்.

இதேபோல சென்னை சென்டிரல் மற்றும் கோவை வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் நேரம் மாற்றபட்டுள்ளது.

ஜூலை 1-ந் தேதி முதல் மும்பையில் இருந்து தினந்தோறும் 11.45 மணிக்கு புறப்படும் மும்பை சி.எஸ்.டி.-சென்னை சென்டிரல் எக்ஸ்பிரஸ் ரெயில் (11027), சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு காலை 4.25 மணிக்கு வந்தடையும். ஜூலை 3-ந் தேதி முதல் (வியாழக்கிழமைகளில்) கோவையில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்படும் ராஜ்கோட் எக்ஸ்பிரஸ் வாராந்திர ரெயில் (16614), சனிக்கிழமைகளில் இரவு 7 மணிக்கு ராஜ்கோட் சென்றடையும். ஜூலை 4-ந் தேதி முதல் (வெள்ளிக்கிழமைகள் தோறும்) கோவையில் இருந்து புறப்படும் கோவை-சென்னை சென்டிரல் எக்ஸ்பிரஸ் வாராந்திர ரெயில் (12682) சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தை காலை 7.15 மணிக்கு வந்தடையும்.

ஜூலை 13-ந் தேதி முதல் சென்னை சென்டிரலில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்படும் சென்னை சென்டிரல்-மைசூர் காவிரி எக்ஸ்பிரஸ் ரெயில் (16021), மைசூர் ரெயில் நிலையத்துக்கு காலை 6.45 மணிக்கு சென்றடையும். ஜூலை 14-ந் தேதி முதல் கோவையில் இருந்து தினந்தோறும் புறப்படும் கோவை-மன்னார்குடி செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயில் (16616), மன்னார்குடி ரெயில் நிலையத்தை காலை 7.55 மணிக்கு சென்றடையும். ஜூலை 14-ந் தேதி முதல் சென்னை சென்டிரலில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்படும் சென்னை சென்டிரல்-மதுரை துரந்தோ எக்ஸ்பிரஸ் ரெயில் (22205), காலை 7.10 மணிக்கு மதுரையைச் சென்றடையும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்