Idhayam Matrimony

2020-ல் விமான பயணிகளின் எண்ணிக்கை உயருமாம்!

திங்கட்கிழமை, 30 ஜூன் 2014      வர்த்தகம்
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை.1 - இந்திய விமான போக்குவரத்துத் துறையில் ஏற்பட்டுள்ள கொள்கை மாற்றம் காரணமாக 2020-ல் இந்தியாவுக்கு வரும் விமான பயணிகளின் எண்ணிக்கை 40 கோடியாக உயரும் என மத்திய விமானத்துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ தெரிவித்தார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சிறிய ரக உள்ளூர் விமான போக்குவரத்தை மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ தொடங்கி வைத்தார். மாநில முதல்வர் வசுந்தரா ராஜே கலந்து கொண்ட இந்த விழாவில் அமைச்சர் கஜபதி பேசியதாவது: இந்திய விமான போக்குவரத்து துறையில் மத்திய அரசு தற்போது எடுத்துள்ள கொள்கை மாற்றம் காரணமாக வருகிற 2020-ல் இந்தியாவுக்கு வரும் விமான பயணிகலின் எண்ணிக்கை 40 கோடியாக உயர வாய்ப்புள்ளது. இந்தியா விமான போக்குவரத்துத் துறையை சுதந்திரமான வர்த்தக சந்தையாக மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த சிறிய ரக விமான போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் முடுக்குகளில் கூட விமான போக்குவரத்தை இயக்க முடியும். இதனால் ஏராளமான நடுத்தர மக்கள் பயன் அடைவர்.

சிறிய ரக விமானங்களை அனுமதிப்பது என்ற கொள்கையின் மூலமாக கடந்த ஒரு ஆண்டில் விமான பயணிகளின் எண்ணிக்கை 16.9 கோடியாக உயர்ந்துள்ளது. உலக சந்தையில் தற்போது 10 வது இடத்தில் உள்ள இந்தியா விமானத்துறை மிகவும் வளர்ந்து வரும் துறையாக இருக்கிறது. பாகிஸ்தானில் உள்ள பிகானேர் பகுதிக்கு விமான போக்குவரத்து தொடங்குவதன் மூலம் பாலைவனமாக உள்ள அந்த பகுதிக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து மேலும் அதிகரிக்கும். இவ்வாறு கஜபதி பேசினார்.

ராஜஸ்தான் மாநில விமானிகள் பயிறசி பள்ளி அமைப்பதற்கு ஏற்ற மாநிலமாகும். எனவே இதுகுறித்து மத்திய அரசு ஆலோசிக்க வேண்டும் என நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் வசுந்தரா வேண்டுகோள் விடுத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்