முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4 ஜி ஊழல்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

செவ்வாய்க்கிழமை, 1 ஜூலை 2014      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூலை.2 - 4ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஊழல் நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில், மத்திய அரசு, டிராய் அமைப்புக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

கடந்த ஆண்டு ஐக்கிய முற் போக்கு கூட்டணி ஆட்சியின்போது, 4ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ரிலை யன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. 2ஜி வழக்கில், ஸ்பெக்ட்ரம் ஒதுக் கீட்டை ஏலம் மூலம் விட வேண்டும் என்று நீதிமன்றம் அளித்த தீர்ப் பையும் மீறி, இந்த ஒதுக்கீடு நடந் துள்ளதாக பொதுநல வழக்குகளுக் கான மையம் என்ற அமைப்பின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த 2011-ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட விலையின் அடிப்படையில், குறைந்த விலையான ரூ.1,658 கோடிக்கு ஒதுக்கீடு வழங்கப்பட் டுள்ளது. இதில், அரசுக்கு ரூ.40 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள் ளதாக மத்திய கணக்குத் தணிக்கை வரைவு அறிக்கையில் கூறப்பட் டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம், மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்(டிராய்), தொலைத்தொடர்புத் துறை அதி காரிகள், மத்திய தொலைத்தொடர் புத் துறை அமைச்சர் ஆகியோர் இணைந்து சதிச் செயலில் ஈடுபட்டு இந்த ஒதுக்கீட்டை மேற்கொண் டுள்ளனர்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள 4ஜி ஸ்பெக்ட்ரம் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசிடம் ஆம் ஆத்மி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்