முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நைஜிரியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய பிரான்ஸ்!

செவ்வாய்க்கிழமை, 1 ஜூலை 2014      விளையாட்டு
Image Unavailable

 

ரியோடி ஜெனீரோ, ஜூலை.2 - உலகக் கோப்பை போட்டியில் பிரான்ஸ் நைஜீரியாவை 2-0 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

உலகக் கோப்பை போட்டிகளில் நாக்அவுட் சுற்று நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியில் பிரான்ஸ், நைஜீரியாவை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது.பாதி ஆட்டம் துவங்கியதில் இருந்தே பிரான்ஸ் அணி வீரர்கள் திணறிக் கொண்டிருந்தனர்.இந்த நிலைமை ஆட்டத்தின் முதல் பாதி வரை நீடித்தது.

ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் தான் பிரான்ஸ் வீரர்கள் தங்கள் ஆட்டத்தை வெளிப்படுத்தத் துவங்கினர். பிரான்ஸ் வீரர் பால் போக்பா சூப்பராக ஒரு கோல் அடித்து நைஜீரிய வீரர்களை அதிர்ச்சி அடைய வைத்தார். பிரான்ஸ் ஒரு கோல் அடித்திருந்த நிலையில் அந்நாட்டு வீரர் மேத்யூ வால்பியூனா கோல் அடிக்க முயற்சி செய்ய பந்தை தடுக்க கோல் போஸ்டில் நின்ற நைஜீரிய வீரர் ஜோசப் யோபாவின் காலில் பந்து பட்டு அது கோல் ஆகிவிட்டது. இதையடுத்து பிரான்ஸ் வெற்றி பெற்று நைஜீரியாவை உலகக் கோப்பை போட்டிகளில் இருந்து வெளியே அனுப்பியது.

காலிறுதி போட்டியில் பிரான்ஸ் ஜெர்மனியை சந்திக்க உள்ளது. நாக்அவுட் சுற்றில் ஜெர்மனி அல்ஜீரியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்