முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.1 லட்சம் கோடிக்கு பட்ஜெட்: தெலுங்கானா முதல்வர்

செவ்வாய்க்கிழமை, 1 ஜூலை 2014      அரசியல்
Image Unavailable

 

ஐதராபாத், ஜூலை.2 - இந்த மாதம் 2வது வாரத்தில் தெலுங்கானா மாநிலத்தின் முதல் பட்ஜெட் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் ரூ.1லட்சம் கோடிக்கு பட்ஜெட் போட தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் திட்டமிட்டுள்ளதாக மாநில வருவாய் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆந்திராவை பிரித்து தெலுங்கானா புதிய மாநிலம் கடந்த ஜூன் 2ம் தேதி உதயமானது. தெலுங்கானா பிராந்தியத்தில் பெரும்பான்மையான இடங்களை வெற்றி பெற்ற தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி தலைவர் சந்திர சேகரராவ் அம்மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், தெலுங்கானா சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டதொடர் வரும் 12ம் தேதி துவங்கவுள்ளது. இதில் தெலுங்கானா மாநிலத்தின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் புதிதாக வரிகள் எதுவும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

தெலுங்கானா ராஷ்ரிய சமிதி கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டபடி பட்டமேற்படிப்பு, முதியோருக்கு ஓய்வூதியம், ஊனமுற்றோருக்கு ஓய்வூதியம், தலித்துகளுக்கு இலவச நிலம், ஏழைகளுக்கு இலவச வீடு என பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. இவை அனைத்தும் நிறைவேற்றும் வகையில் ரூ.1லட்சம் கோடிக்கு பட்ஜெட் போட தெலுங்கானா முதல்வர் சந்திர சேரராவ் திட்டமிட்டுள்ளார். இந்த வார இறுதியில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. அப்போது பட்ஜெட் தொகை இறுதி செய்யப்படும் என அவ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்