முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விரைவில் பேட்டரி ரிக் ஷா: டெல்லி அரசு திட்டம்

புதன்கிழமை, 2 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை.3 - டெல்லியில் பேட்டரியால் இயங்கும் 3 சக்கர ரிக்ஷாக்களை இயக்க அரசு முடிவு செய்துள்ளதுய. டெல்லியில் பேட்டரியால் இயங்கும் ரிக்ஷாக்களை மாநில போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது. இந்த ரிக்ஷா, ஆட்டோ ரிக் ஷா போன்று 3 சக்கரங்களை கொண்டதாக இருக்கும். பேட்டரியில் அயங்குவதால், பெட்ரோல், டீசல் போன்றவற்றால் ஏற்படும் மாசு குறைந்து சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு உதவும். இது குறித்து, போக்குவரத்து கமிஷனர் ஜியானேஷ் பார்தி கூறுகையில், இது போன்ற பேட்டரியால் இயங்கும் ரிக் ஷாக்களை தயாரிக்க பல்வேறு நிறுவனங்கல் முன்வந்துள்ளன. அவற்றின் வாகனங்களை சோதனை செய்து அவற்றின் தரத்திற்கேற்ப அனுமதி வழங்குவது குறித்து டெல்லி அரசு பரிசீலித்து வருகிறது.

பேட்டரியால் இயங்கும் இவ்வகை ரிக்ஷாக்கல் மற்ற ஆட்டோ ரிக்ஷாக்களுடன் ஒப்பிடும் போது விலை மலிவாகும். சுற்று சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாதவையாகும், என்றார். வழக்கமான ஒட்டுனர் உரிமம் பெற்ற டிரைவர்களை கொண்டு பொது மக்கல் சேவைக்காக பேக்குவரத்துதுறையில் அனுமதியுடன் மட்டுமே இவை இயக்கப்படும்.

பேட்டரி ரபிக்ஷா தயாரிப்பு நிறுவன அதிகாரி கூறுகையில், 1000 வாட் பேட்டரியால் இயங்கும் இந்த இ-ரிக்ஷாக்கள் மற்ற கியர் ஆட்டோக்களை போலவே இயங்கும். இதனை தயாரிக்க டெல்லி அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம் என்றார். இவ்வகை பேட்டரி ரிக்ஷாக்களின் விலை மலிவாக இருப்பதால் இவற்றை வாங்க பலருக்கும் ஆர்வம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்