முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்த பெல்ஜியம்

புதன்கிழமை, 2 ஜூலை 2014      விளையாட்டு
Image Unavailable

 

சால்வடார், ஜூலை.3 - பெல்ஜியம், அணி, 28 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக உலகக் கோப்பைக் கால்பந்து காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

ரவுண்ட் 16 போட்டியில் அது அமெரிக்க சவாலை அழகாக எதிர்கொண்டு 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குத் தகுதி பெற்றது. காலிறுதிப் போட்டியில் அது வலிமை வாய்ந்த அர்ஜென்டினாவை எதிர்கொள்ளவுள்ளது.

அர்ஜென்டினா - சுவிட்சர்லாந்து போட்டியைப் போலவே இந்தப் போட்டியும் கூடுதல் நேரத்திற்குப் போய் விட்டது. இறுதியில் பெல்ஜியம் வெற்றியைச் சுவைத்தது.பெல்ஜியம் அணியின் கெவின் டி ப்ரூயன், ரொமேலு லுகாகு ஆகியோர் பெல்ஜியம் அணிக்கான கோல்களை அடித்தனர். இருகோல்களுமே கூடுதல் நேரத்தில் வந்தவை.

முன்னதாக 90 நிமிட முழு நேர ஆட்டத்தின்போது பெல்ஜியம் அணியின் கோல் முயற்சிகளை அபாரமாக தடுத்து அமெரிக்க கோல் கீப்பர் டிம் ஹோவர்ட் ஆட்டம் காட்டி விட்டார். இதர வீரர்களை விட இவர் கோல்களைத் தடுத்த விதம் தான் சூப்பர்ப் ஆக இருந்தது. ஆனால் கூடுதல் நேரத்தில் பெல்ஜியம் சற்றும் இரக்கம் காட்டாமல் அதிரடியாக ஆடியது. முதலில் லுகாகு எடுத்துக் கொடுத்த பந்தை கெவின் கோலாக்கினார். அடுத்த சில நிமிடங்களில் கெவின் எடுத்துக் கொடுத்த பந்தை லுகாகு கோலாக்கி கலக்கி விட்டார். காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள பெல்ஜியம் அதில் அர்ஜென்டினாவைச் சந்திக்கவுள்ளது. அதில் அது வெல்லுமா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

கடந்த 1986 போட்டித் தொடரின்போது அரை இறுதியில் அர்ஜென்டினாவை சந்தித்தது பெல்ஜியம். அதில் அர்ஜென்டினா வென்றது. எனவே அதற்கு இப்போது பழி தீர்க்க அதற்கு நல்ல வாய்ப்பு வந்துள்ளது. ஆனால் காலிறுதியோடு பெல்ஜியத்தின் கதையை முடிக்க அர்ஜென்டினா முயலும் என்பதில் சந்தேகமில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்