முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காலிறுதி ஆட்டம்: ஜெர்மனி - பிரான்சு இன்று பலப்பரிட்சை

வியாழக்கிழமை, 3 ஜூலை 2014      விளையாட்டு
Image Unavailable

 

ரியோடி ஜெனிரோ, ஜூலை 4 - உலகக் கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் நடைபெற்று வருகிறது. 2வது சுற்றின் முடிவில் சாம்பியன்கள் பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து, கொலம்பியா, பெல்ஜியம், கோஸ்டாரிகா ஆகிய நாடுகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.

2 நாள் ஓய்வுக்கு பிறகு காலிறுதி ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது. ரியோடி ஜெனிரோவில் இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு நடைபெறும் முதல் காலிறுதி ஆட்டத்தில் ஜெர்மனி _ பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் பலம் பொருந்தியவை என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலக கோப்பையில் ஆதிக்கம் செலுத்தி வரும் முன்னணி அணிகளில் ஒன்றாக ஜெர்மனி திகழ்கிறது. 3 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற அந்த அணி கடந்த 3 உலக கோப்பையிலும் அரை இறுதிக்கு நுழைந்து இருந்தது. தற்போது 13வது முறையாக அரையிறுதியில் நுழைவதில் ஆர்வமாக இருக்கிறது. ஜெர்மனி அணியின் நட்சத்திர வீரராக தாமஸ் முல்லர் ஜொலிக்கிறார். அவர் இதுவரை 4 கோல் அடித்துள்ளார். இது தவிர ஒசில், சுவாஸ்டிக்கர், ஹம்மல்ஸ், ஆந்த்ரே, கேப்டன் பிலிப் போன்ற சிறந்த வீரர்களும் ஜெர்மனி அணியில் உள்ளனர்.

லீக் ஆட்டங்களில் 4_0 என்ற கணக்கில் போர்ச்சுக்கலையும் 1_0 என்ற கணக்கில் அமெரிக்காவையும் தோற்கடித்து கானாவுடன் 2_2 என்ற கணக்கில் டிரா செய்தது. 2வது சுற்றில் அல்ஜீரியாவை 2_1 என்ற கணக்கில் வென்றது. தோல்வியை சந்திக்காத ஜெர்மனி அரை இறுதிக்கு தகுதி பெற கடுமையாக போராட வேண்டும்.

ஜெர்மனி அணிக்கு எல்லா வகையிலும் சவால் விடக்கூடிய வகையில் பிரான்ஸ் அணி உள்ளது. இந்த போட்டி தொடரில் சிறப்பாக விளையாடி வரும் அணிகளில் ஒன்றாக பிரான்ஸ் திகழ்கிறது. அந்த அணியின் நட்சத்திர வீரர் கரீம் பென்சிமா சிறப்பாக ஆடி வருகிறார். அவர் 3 கோல்கள் அடித்துள்ளார். இது தவிர போக்பா, கிரவுட் போன்ற சிறந்த வீரர்களும் அந்த அணியில் உள்ளனர்.

பிரான்ஸ் அணி லீக் ஆட்டங்களில் 3_0 என்ற கணக்கில் ஹோண்டுராசையும், 5_2 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்தையும் வென்றது. ஈக்வடாருடன் 0_0 என்ற கணக்கில் டிரா செய்தது. 2வது சுற்றில் நைஜீரியாவை 2_0 என்ற கணக்கில் வென்றது. 1998ம் ஆண்டு சாம்பியனான அந்த அணி 6வது முறையாக அரையிறுதியில் நுழையும் ஆர்வத்தில் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்