முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை

வியாழக்கிழமை, 3 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை.4 - இந்தியாவில் உள்ளூர் சந்தைகளில் வெங்காய விலை உயர்வைத் தடுக்க குறைந்த பட்ச ஏற்றுமதி விலையை மத்திய அரசு 500 டாலராக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் 15மில்லியன் டன் வெங்காயம் பயன்படுத்தப்படுகிறது. மிக முக்கிய நுகர்வு பொருளான வெங்காயம் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டால் உள்ளூர் சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்வு வழி வகுக்கும்.இதனைக் கட்டுப்படுத்த இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வெங்காயத்தின் குறைந்தபட்ச விலையை உயர்த்தி இன்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் வெங்காயத்தின் குறைந்தபட்ச ஏற்றுமதி விலை ஒரு டன்னுக்கு 500 டாலராக அதாவது 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஏற்றுமதி குறைந்து, உள்ளூர் சந்தைகளில் வெங்காயத்தின் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜூன் 17ம் தேதி வெங்காயத்திற்காக குறைந்தபட்ச ஏற்றுமதி விலை டன்னுக்கு 300 டாலராக (ரூ.18000) நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் வெங்காயத்தின் குறைந்த பட்ச ஏற்றுமதி விலை டன்னுக்கு 30000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு உருளைக்கிழங்கு ஏற்றுமதியை கட்டுப்படுத்த அதற்கு டன் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை 450 டாலர் (ரூ.27000) என நிர்ணயித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. நாட்டின் பணவீக்கம் கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு 6.01 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. காய்கறிகள், பழங்கள், தானியங்கள் ஆகியவற்றின் விலை உயர்வே பணவீக்கம் அதிகரிக்கக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தவாரம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் விலைவாசியை கட்டுப்படுத்த மத்தியஅரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாக மத்திய நிதிஅமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago