முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 ஜி: குற்றம் சாட்டப்பட்டவர்களை ஜாமீனில் விடுவிக்க எதிர்ப்பு

வெள்ளிக்கிழமை, 4 ஜூலை 2014      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை.5 - 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான மத்திய அமாக்கத் துறை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வர்களை ஜாமீனில் விடுவிக்கக் கூடாது என்று டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் அத்துறை சார்பில் அட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

அமலாக்கத் துறை வழக்கில் ஜமீனில் விடுதலை செய்யக் கோரி குற்றம் சாட்டப்பட்ட 10 பேர் தாக்கல் செயத் மனுக்கள் மீது நீதிபதி சைனி விசாரணை நடத்தினார். அப்போது, அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான சிபிஐ சிறப்பு வழக்குரைஞர் யு.யு. வவித் முன்வைத்த வாதம்: முறைகேடாக பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டது தொடர்பான அவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் மீது, பண மோசடி தடுப்புச் சட்டம் 2002, 3-வது பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு செய்தது எத்தகைய குற்றம், அதற்கு என்ன தண்டனை வழங்கலாம் என்பதும் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர்களை ஜாமீனில் விடுவித்தால், அவர்கள் சாட்சியங்களைக் கலைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, அவர்களை ஜாமீனில் விடுவிக்கக் கூடாது என்று லலித் வாதிட்டார்.

அவரது வாதத்தைப் பதிவு செய்து கொண்டு நீதிபதி, அலாக்கத் துறையின் நிலைப்பாடு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜூலை 9-ஆம் தேதி பதில் அளிக்க வேண்டும் எனக்குறிப்பிட்டு ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை ஒத்திவைத்தார். 2ஜி அலைக்கற்றை உரிமம் பெற்றஸ்வான் டெலிகாம் நிறுவனம், அதற்கு பிரதிபலனாக சில தனியார் நிறுவனங்கல் மூலம் கலைஞர் டிவிக்கு ரூ.200 கோடி அளித்ததாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இதில், கோடிக்ககணக்கான நிதிப் பரிவர்த்தனை முறைகேடு புகார் அடங்கியுள்ளதால், மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் உள்ள அமலாக்கத் துறை அந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ நீதிமன்றத்தில் தனியாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில், சிபிஐ வழக்கல் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராசா, கனிமொழி, சரத்குமார், ஷாஹித் பல்வா ஆகியோருடன் சேர்த்து திமுக் தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், களைஞர் டிவி நிர்வாகி அமிர்தம் உள்பட 10 பேர் மற்றும் 9 நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில், வயோதிகம், உடல்நிலை காரணமாக தன்னை அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று தயாளு அம்மாள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதன் மீதான உத்தரவு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், ஜாமீன் கோரி குற்றம் சாட்டப்பட்டவர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்