முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூடங்குளம் 2-வது அணுஉலையில் வெப்ப நீர் சோதனை

சனிக்கிழமை, 5 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

நெல்லை, ஜூலை 6 - கூடங்குளத்தில் அமைந்துள்ள 2வது அணு உலையில் அடுத்த மாதம் வெந்நீர் சோதனை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்ய நாட்டு உதவியுடன் கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் கொள்ளளவு கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் முதல் உலையில் ஆயிரம் மெகாவாட் முழு கொள்ளளவு உற்பத்தியை எட்டி தொடர்ந்து பல்வேறு கட்ட ஆய்வுகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் 2வது அணு உலையில் மின் உற்பத்தியை தொடங்க முதல் கட்ட பணிகளை அணு உலை நிர்வாகம் தொடங்கி உள்ளது.

அணு உலையில் உள்ள யுரேனியம் நிரப்பும் ராடுகளில் மாதிரி எரிபொருள் நிரப்பப்பட்டு ஆய்வுகள் தொடங்கியுள்ளன. 163 நாடுகளில் யுரேனியத்தை நிரப்புவதற்கு முன்பாக மாதிரி எரிபொருள் இப்போது நிரப்பப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக வெப்ப நீர் சோதனை அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. இந்த சோதனைகள் முடிந்த பிறகு அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் ஒப்புதலை பெற்று யுரேனியம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். இதன் தொடர்ச்சியாக அடுத்த ஆண்டு ஜனவரியில் மின் உற்பத்தியை தொடங்க திட்டமிட்டிருப்பதாக அணு உலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்