முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சுப்பிரமணியன் சுவாமி கடிதம்

சனிக்கிழமை, 5 ஜூலை 2014      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை 6 - நேஷனல் ஹெரால்டு சொத்து அபகரிப்பு புகார் தொடர்பாக காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சிலரிடம் விசாரணை நடத்த கோரி அமலாக்கத்துறை இயக்குனரகத்துக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம் எழுதியுள்ளார்.

ஏற்கனவே அவர்கள் இருவருக்கும் எதிராக டெல்லி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சோனியாவும், ராகுலும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளதை அதில் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். யங் இந்தியன் என்ற நிறுவனத்தால் நடத்தப்பட்டு பின்னர் கைவிடப்பட்ட பத்திரிகையை அசோசியேட் ஜர்னல்ஸ் என்ற நிறுவனம் வாங்கி நேஷனல் ஹெரால்டு என்ற பெயரில் நடத்தி வந்தது.

அந்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்கியதால் காங்கிரஸ் கட்சியின் நன்கொடை பணத்தில் இருந்து ரூ. 90 கோடி அளித்ததாகவும், அதற்கு பிரதிபலனாக பல ஆயிரம் கோடி மதிப்புள்ள நேஷனல் ஹெரால்டு சொத்துக்களை சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் அபகரித்தனர் என்று குற்றம் சாட்டி சுப்பிரமணியன் சுவாமி விசாரணை கோரியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்