முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக் கோப்பை: அரையிறுதியில் ஜெர்மனி - பிரேசில்

சனிக்கிழமை, 5 ஜூலை 2014      விளையாட்டு
Image Unavailable

 

பெலோ ஹோரிசோன்ட், ஜூலை 6 - உலக கோப்பை கால்பந்து போட்டியில் கடந்த 1ம் தேதியுடன் 2வது சுற்று ஆட்டங்கள் முடிந்தன. இதன் முடிவில் பிரேசில் , ஜெர்மனி, அர்ஜென்டினா, பிரான்ஸ், நெதர்லாந்து, கொலம்பியா, பெல்ஜியம், கோஸ்டாரிகா ஆகிய நாடுகள் கால் இறுதிக்கு தகுதி பெற்றன.

இரண்டு நாள் ஓய்வுக்கு பிறகு நேற்று முன்தின ம் கால் இறுதி ஆட்டம் தொடங்கியது. நேற்று முன்தினம் நடந்த ஆட்டங்களில் ஜெர்மனி 1_0 என்ற கோல் கணக்கில் பிரான்சையும், பிரேசில் 2_1 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவையும் தோற்கடித்தன. வெற்றி பெற்ற இந்த இரண்டு அணிகளும் அரை இறுதியில் சந்திக்கின்றன.

ஜெர்மனி, பிரேசில் அணிகள் மோதும் முதல் அரை இறுதி ஆட்டம் வருகிற 8ம் தேதி நள்ளிரவு 1.30 மணிக்கு நடக்கிறது. பலம் வாய்ந்த இரு அணிகள் மோதும் அரை இறுதி கால்பந்து ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும். 3 முறை உலகக் கோப்பையை வென்ற ஜெர்மனி 13வது முறையாக அரை இறுதிக்கு முன்னேறி இருக்கிறது. அதுவும் தொடர்ந்து 4வது முறையாக அரை இறுதியில் சாதனை படைத்தது.

இதில் 2002ல் இறுதி போட்டி வரை வந்து பிரேசிலிடம் தோற்றது. 2006ல் இத்தாலியிடமும், 2010ல் ஸ்பெயினிடமும் அரை இறுதியில் தோற்றது. 5 முறை உலக கோப்பையை வென்ற பிரேசில் அணி 11வது முறையாக அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது. பிரேசில் அணி கடைசியாக 2002ம் ஆண்டு சாம்பியன் பட்டம் பெற்றது.

அதன்பிறகு அந்த அணி அரை இறுதியில் நுழைந்தது இல்லை. 2006ல் பிரான்சிடமும், 2010ல் நெதர்லாந்திடமும் கால் இறுதியில் தோற்றது. இந்த இரு அணிகளும் 21 முறை மோதியுள்ளன. இதில் பிரேசில் 12 தடவையும், ஜெர்மனி 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 5 ஆட்டம் டிரா ஆனது. தற்போதுள்ள ஜெர்மனி அணி பலம் வாய்ந்ததாக இருப்பதால் பிரேசில் அணி இறுதிப் போட்டியில் நுழைய கடுமையாக போராட வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்