முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

86 அடுக்குமாடி கட்டிடங்களில் அரசு அதிகாரிகள் சோதனை

சனிக்கிழமை, 5 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.6 - சென்னை மவுலிவாக்கம் கட்டிட விபத்து சம்பவத்தை தொடர்ந்து சென்னை பெருநகர் வளர்ச்சி குழும அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கடந்த 2 நாட்களாக 84 கட்டிடங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்

சி.எம்.டி.ஏ. திட்ட அனுமதிக்கு உட்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளதா? விதிமீறல் உள்ளதா? திட்ட அனுமதியில் குறிப்பிடப்பட்டுள்ள காலி இடங்கள் பின்பற்றப்பட்டுள்ளதா? என அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினார்கள்.

முதல் நாள் நடந்த சோதனையில் 46 கட்டிடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் 24 பல அடுக்குமாடி கட்டிடங்களும், 22 சிறப்பு கட்டிடங்களும் (4 மாடி கட்டிடம்) அடங்கும்.

நேற்று மொத்தம் 40 கட்டிடங்களில் சோதனை நடத்தப்பட்டது. 16 குழுக்கள் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். 9 அடுக்குமாடி கட்டிடங்களும், 31 சிறப்பு கட்டிடங்களில் சோதனை செய்து தற்போதுள்ள நிலையை கணக்கெடுத்துள்ளனர். இரு நாட்களில் 86 கட்டிடங்களில் ஆய்வு மேற்கொண்டதற்கான அறிக்கை உறுப்பினர் செயலாளர் கார்த்திக்கிடம் கொடுத்துள்ளனர்.

சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் நேற்று 3–வது நாளாக ஆய்வு மேற்கொண்டனர். இன்று விடுமுறை என்பதால் இந்த பணி தொடர வாய்ப்பு இல்லை. திங்கட்கிழமை முதல் சோதனை தொடரும். 20 நாட்கள் வரை இது நீடிக்கும் என்று சி.எம்.டி.ஏ. அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்