முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

12 ஆண்டுகளில் அரையிறுதிக்கு முன்னேறிய பிரேசில்!

சனிக்கிழமை, 5 ஜூலை 2014      விளையாட்டு
Image Unavailable

 

ரியோடி ஜெனிரோ, ஜூலை.6 - உலக கோப்பை கால்பந்தாட்டத்தின் கொலம்பியா அணியுடனான போட்டியில் பிரேசில் 2-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வெற்றி பெற்று உள்ளூர் ரசிகர்களை நிம்மதி பெருமூச்சு விடச்செய்தது.

நேற்று அதிகாலை 1.30 மணிக்கு நடந்து போட்டியில் கொலம்பியாவும்-பிரெசிலும் மோதின. இந்தபோட்டியில் வெல்லும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் என்பதால், தென் அமெரிக்காவை சேர்ந்த இவ்விரு நாடுகளும் மோதிய போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

கொலம்பியா இந்த உலகக் கோப்பை போட்டி துவக்கம் முதலே தோல்வியே காணாம்ல் இதுவரை வந்துள்ளது. 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று ராஜ நடை போட்டு நேற்றைய காலிறுதியில் பிரேசிலை எதிர்கொண்டது. அதே நேரம் பிரேசில், தனது லீக் ஆட்டங்களில் இரண்டில் வெற்றியும், ஒரு போட்டியில் டிராவும் செய்திருந்ததால் சற்று தடுமாற்றத்துடன் இருந்தது.

ஆட்டம் தொடங்கிய 7வது நிமிடத்திலேயே பிரேசிலின் கேப்டன் டி.சில்வா கோல்போட்டு தனது அணியை முன்னிலைக்கு கொண்டு வந்தார். முதல் பாதி ஆட்டத்தில் வேறு எந்த கோலும் விழாததால் பிரேசில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய நிலையில் 69வது நிமிடத்தில் பிரேசிலின் டேவிட் லூயிஸ் கோல் போட்டு பிரேசிலை 2-0 என்ற கணக்கில் முன்னிலைக்கு கொண்டு வந்தார்.

இதற்கு 80வது நிமிடத்தில் பதிலடி கிடைத்தது. பிரான்சு வீரர் ஜேம்ஸ் ரோட்ரிகுவஸ் கோல் போட்டு பிரேசிலுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தினார்.இதன்பிறகு எந்த அணியும் கோல் போடாததால், ஆட்ட நேர முடிவில் பிரேசில், 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது.

12 வருடங்களில் முதன்முறையாக பிரேசில் இப்போதுதான் அரை இறுதிக்கு செல்கிறது. உலகின் தலை சிறந்த அணியாக வர்ணிக்கப்படும் பிரேசில் கடந்த மூன்று உலக கோப்பைகளிலும் சரியாக சோபிக்காத நிலையில், தனது சொந்த மண்ணில் நடக்கும் போட்டியில் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள பிரேசில் , பிரான்சை தோற்கடித்துள்ள ஜெர்மனியும் இந்திய நேரப்படி வரும் புதன்கிழை அதிகாலை 1.30 மணிக்கு நடைபெறும் அரையிறுதியில் பலப்பரிட்சை நடத்த உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago