முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4-வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது ஜெர்மனி

சனிக்கிழமை, 5 ஜூலை 2014      விளையாட்டு
Image Unavailable

 

பிரேசிலியா, ஜூலை.6 - உலகக் கோப்பை கால்பந்தாட்டத்தின் முதல் காலிறுதிப் போட்டியில் பிரான்ஸை வீழ்த்தி அரையிறுதிக்கு தொடர்ந்து நான்காவது முறையாக சென்றுள்ள தங்கள் அணியின் சாதனையை ஜெர்மனி ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.

பிரேசிலியாவில் நேற்று முன் தினம் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் பிரான்சும், ஜெர்மனியும் மோதின. பலம் வாய்ந்த இரு ஐரோப்பிய அணிகளும் மோதியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. ஆட்டம் தொடங்கிய 13வது நிமிடத்திலேயே ஜெர்மனியின், மேட்ஸ் ஹுமல்ஸ் ஒரு கோல் போட்டு அசத்தினார். மேலே பறந்து வந்த பந்தை தலையில் தட்டி பிரான்சு கீப்பரை ஏமாற்றி இந்த கோலை மேட்ஸ் போட்டார். இதன் பிறகு இரு அணி வீரர்களும் கடுமையாக போராடியும் முதல் பாதியில், வேறு கோல் விழவில்லை.

ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க மிகவும் பிரயத்தனப்பட்டதால் வீரர்கள் நடுவே மோதல் அதிகமானது. இதன் காரணமாக, சமி கேட்ரியா 54வது நிமிடத்திலும், பஸ்டியன் 80வது நிமிடத்திலும், மஞ்சள் அட்டை பெற்றனர்.

ஆட்ட நேர முடிவில் கூடுதலாக இரு நிமிடங்கள் கொடுக்கப்பட்டது. இருப்பினும் கூடுதலாக கோல் போடமுடியவில்லை. ஜெர்மனியின் தடுப்பு ஆட்டம் அருமையாக இருந்ததால் பிரான்ஸ் தோல்வியை தழுவியது. ஆட்ட நேர முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி வெற்றி பெற்றது. அரையிறுதியில் ஜெர்மனி அணி பிரேசிலுடன் மோத உள்ளது. தொடர்ந்து நான்காவது முறையாக ஜெர்மனி அரையிறுதிக்குள் சென்று புதிய சாதனை படைத்துள்ளது. 2002, 2006, 2010, 2016 ஆகிய நான்கு உலக கோப்பைகளிலும் ஜெர்மனி அரையிறுதிக்குள் சென்றுள்ளது. இந்த நூற்றாண்டில் வேறு எந்த அணியும் இந்த சாதனையை செய்யவில்லை என்று இதை வர்ணிக்க முடியும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்