முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொருளாதாரத்தை மீட்டெடுக்க கால தாமதமாகும்: ராஜ்நாத்

ஞாயிற்றுக்கிழமை, 6 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

லக்னோ, ஜூலை 7 - நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டு வர சிறிது காலம் பிடிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

அவர் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது,

நமது பொருளாதாரம் தடம் புரண்டுள்ளது. தற்போது அதன் நிலை கவலைக்கிடமாக உள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டு வர அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவை பயன் தர சிறிது காலம் ஆகும். அதே போல் பணவீக்கத்தை கட்டுப்படுத்த அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாட்டின் முக்கிய நதிகளை சுத்திகரிப்பதும் புத்துயிரூட்டுவதும் மோடி அரசின் முன்னுரிமை திட்டங்களில் இடம் பெற்றுள்ளது. நதிகளை பாதுகாக்க நாம் தவறினால் நமது சமூகத்திற்கு மிக பெரிய தீங்கு ஏற்படும். கங்கை மற்றும் கோமதி நதிகளை சுத்திகரிக்க வேண்டும் என்பதில் நான் உறுதிபூண்டுள்ளேன் என்று ராஜ்நாத்சிங் தெரிவித்தார். முன்னதாக அவர் லக்னோவில் கோமதி நதிக்கு ஆரத்தி காட்டி வழிபட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!