முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈராக்: புனித தலங்களை தரைமட்டமாக்கிய காட்சி வெளியீடு

ஞாயிற்றுக்கிழமை, 6 ஜூலை 2014      உலகம்
Image Unavailable

 

பாக்தாத், ஜூலை 7 - ஈராக்கில் பள்ளிவாசல்கள், பழமைவாய்ந்த புனித தலங்கள் மற்றும் ஏராளமான வீடுகளை தீவிரவாதிகள் கடந்த மாதம் தரைமட்டமாக்கியுள்ள காட்சிகள் சமூக வலைதள ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

வடக்கு நினிவே மாகாணத்தின் பல பகுதிகளிலும் மொசூல் நகரிலும் சன்னி பிரிவினருக்கு சொந்தமான 4 புனித தலங்கள், ஷியா பிரிவினருக்குரிய 6 பள்ளிவாசல்கள் முற்றிலும் இடித்து தள்ளப்பட்டுள்ளன. இணையதளத்தில் ஐ.எஸ். போராளிகள் குழுவினர் வெளியிட்டுள்ள படங்களில் புல்டோசர்கள் மூலம் சன்னி பிரிவு புனித தலங்களை இடித்து தள்ளும் காட்சிகளும், ஷியா பிரிவு பள்ளிவாசல்கள் மற்றும் புனித தலங்கள் வெடிகுண்டு வீசி தகர்க்கப்பட்ட படங்களும் இடம் பெற்றுள்ளன.

தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இரு தேவாலயங்களும் அழிக்கப்பட்டுள்ளதை உள்ளூர்வாசிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். மொசூல் நகரை சேர்ந்த அகமது என்பவர் கூறுகையில், இந்த புனித தலங்கள் அழிக்கப்பட்டது வருந்தத்தக்கது. அவை எங்கள் மூதாதையர் காலத்தை சேர்ந்தவை என்றார். மொசூலின் சால்டியன் பேராலயத்தை சேர்ந்த ஒரு ஊழியர் கூறுகையில், தீவிரவாதிகள் இரு தேவாலயங்களையும் ஆக்கிரமித்திருந்தனர். அவற்றின் முன்பு இருந்த சிலுவையை அகற்றி விட்டு இஸ்லாமிய நாட்டின் கருப்பு கொடியை ஏற்றினர். மொசூல் மற்ஹும் நினிவே ஆகிய பகுதிகளில் சன்னி பிரிவினர் பெரும்பான்மையாகவும் அடுத்ததாக அரேபிய குடியேற்ற ஷியா பிரிவினரும் சிறுபான்மையினராக சூர்து, துர்மெனிஸ்தானியர்கள், யாஜிதி மற்றும் பல்வேறு பிரிவினரும் வசிக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்