முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க சுதந்திரதினம்: ஒபாமாவுக்கு பிரணாப் வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 6 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

டெல்லி: ஜூலை 7 - அமெரிக்காவின் 238-வது சுதந்திர தினத்தையொட்டி அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது :-

இந்தியாவும், அமெரிக்காவும் நாட்டின் குடிமக்கள் மதிப்புடன், மரியாதையுடன் வாழ்வதற்காக பல்வேறுதுறைகளில் இணைந்து கொள்கை கோட்டுபாடுகளை உருவாக்குவதில் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டுள்ளன. அதுமட்டுமின்றி உலக மக்கள் அனைவரும் நலமாக வாழ பாடுபட்டு வருகின்றன.

இந்த நேரத்தில் தங்களது நாட்டின் 238-வது சுதந்திர தினம் கொண்டாடப்படுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், உவகையையும் அளிக்கிறது. அதற்காக இந்திய மக்கள் சார்பிலும், இந்திய அரசின் சார்பிலும் தங்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் குடும்பத்தினரின் ஆரோக்கியத்திற்கும், மகிழ்ச்சியான வாழ்க்கைக்கும் எனது வாழ்த்துகள். தாங்கள் அனைத்து துறைகளிலும் வெற்றிகரமாக செயல்பட்டு அமெரிக்க மக்களுக்கு சேவையாற்ற வாழ்த்துகிறேன்.இவ்வாறு தனது வாழ்த்துச் செய்தியில் அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்