முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெல்ஜியத்தை வீழ்த்தி அரையிறுதியில் அர்ஜென்டினா

ஞாயிற்றுக்கிழமை, 6 ஜூலை 2014      விளையாட்டு
Image Unavailable

 

பிரேசிலியா, ஜூலை.7 - உலகக் கோப்பைக் கால்பந்து காலிறுதிப் போட்டியில் பெல்ஜியம் அணியின் அச்சுறுத்தலை முறியடித்து, அர்ஜென்டீனா அரையிறுதிக்கு முன்னேறியது. பிரேசிலியாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் அர்ஜென்டீனா பெல்ஜியத்தை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. அர்ஜென்டீனாவின் ஸ்ட்ரைக்கர் கொன்சாலோ ஹிகுவே துவக்க நிமிடங்களில் அடித்த கோலே வெற்றி கோலாக அமைந்தது.

இந்த வெற்றி மூலம் 1990 ஆம் ஆண்டிற்குப் பிறகு, அர்ஜென்டீனா உலகக் கோப்பை அரயிறுதிக்கு முன்னேறியுள்ளது. ஆட்டத்தின் துவக்க நிமிடங்களிலேயே இவர்கள் பெல்ஜியத்தை அச்சுறுத்தத் தொடங்கினர். மெஸ்ஸி முன்களத்தில் இருந்தார். அவர் இசகியல் லாவெஸிக்கு ஒரு தாழ்வான ஷாட்டை பாஸ் செய்ய அது கோல் நோக்கி எடுத்துச் செல்லப்பட்ட அதனை வின்சென்ட் கொம்பெனி கிளியர் செய்தார்.

ஆட்டத்தின் 8வது நிமிடத்தில் பெல்ஜியத்தின் சென்டர் பேக் நிலையிலிருந்த வீரர் பந்தைத் தன் கட்டுப்பாட்டிலிருந்து இழந்தார், மச்செரானோ பந்தை மெஸ்ஸிக்குப் பாஸ் செய்தார். மெஸ்ஸி உடனே உத்வேகம் பெற்று பெல்ஜியம் வீரர்களான டி புருய்ன் ஃபெல்லாய்னி ஆகியோருக்குப் போக்கு காட்டி ஆஞ்செல் டி மரியாவுக்குப் பாஸ் செய்தார். அந்த பாஸ் கூட அச்சுறுத்தல் அல்ல, அந்தப் பந்து பெல்ஜியம் வீரர் ஜேன் வெர்டோங்கெனின் வலது காலில் பட்டு தன் பாட்டுக்கு நின்று கொண்டிருந்த ஹிகுவே வழியில் வர அவர் அதனை அபாரமான முறையில் கோலாக மாற்றினார்.

மெஸ்ஸியின் மீது கவனம் செலுத்தி அவரைத் தடுக்கவே 3 வீரர்களை நியமித்தது பெல்ஜியம் அணியின் ஆட்டத்தை மந்தப்படுத்தியது. கெவின் டி புருய்ன் ஒரு முறை 25 அடியிலிருந்து ஒரு ஷாட்டை கோலை நோக்கி அடிக்க அதனை ரொமீரோ எளிதில் பிடித்துவிட்டார். பிறகு கெவின் மிரலாஸ், வேர்டோங்கென் செய்த பாஸை தலையால் அடிக்க அது கோலுக்கு மிக அருகே வெளியே சென்றது. இடைவேளைக்குப் பிறகும் பெல்ஜியத்தின் ஆட்டத்தில் பெரிய மாற்றங்கள் இல்லை.

மாறாக ஹிகுவே இரண்டாவது கோலை அடித்திருப்பார். அந்த முயஸியை டேனியல் வான் பியூட்டன் முறியடித்தார். இன்னொரு முறை ஹிகுவே அடித்த ஷாட் கோல் மேல் கம்பத்தில்பட்டது. அன்று போலவே ரொமிலு லுகாகு வந்த பிறகு பெல்ஜியம் சற்றே உத்வேகம் காட்டியது. ஆனால் அதன் முயற்சிகள் பலனளிக்கும் விதமாக அமையவில்லை.

மாறாக ஆட்டம் முடியும் தறுவாயில் மெஸ்ஸி தனது 5வது கோலை அடிக்க வாய்ப்பு ஏற்பட்டது. அந்த முயற்சியை தீபோ கோர்டாய்ஸ் முறியடித்தார். ஜெர்மனி, பிரேஸில் அணிகளுடன் அர்ஜென்டீனா அரையிறுதிக்கு முன்னேறியது. மற்றொரு காலிறுதியில் பென்லாடி ஷூட் அவுட்டில் நெதர்லாந்து கோஸ்டா ரிகாவை வெளியேற்றியதால் அர்ஜென்டீனா, நெதர்லாந்து அரையிறுதியில் மோதுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்