முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹார்வர்டு பல்கலை.க்கு வெடிகுண்டு மிரட்டல்

திங்கட்கிழமை, 7 ஜூலை 2014      உலகம்
Image Unavailable

 

நியூயார்க், ஜூலை 8 - அமெரிக்காவின் மசாசூஸெட்ஸ் மாகாணத்தில் ஹார்வர்டு பல்கலைக் கழகத்துக்கு டுவிட்டர் சமூக வலைதளம் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த மிரட்டலை தொடர்ந்து உடனடியாக பல்கலைக் கழகத்தின் அனைத்து கட்டிடங்களுக்கும் எச்சரிக்கை மணி ஒலிக்க செய்யப்பட்டது. இதையடுத்து கோடை கால வகுப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். பின்னர் அந்த பகுதிக்கு விரைந்த அமெரிக்க புலனாய்வு துறை போலீசாரும், கல்லூரி காவலர்களும் இணைந்து வெடிகுண்டை தேடும் பணியில் ஈடுபட்டனர். எனினும் வெடிகுண்டு எதுவும் கைப்பற்றப்படவில்லை. இந்த மிரட்டல் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த டிசம்பர் மாதமும் இந்த பல்கலைக் கழகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்